• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

உ.பி.யில் காங்கிரசுக்கு விழுந்த அடி.. ராகுல் காந்தி 'வலது கரம்' ஆர்.பி.என்.சிங் பாஜகவிற்கு தாவினார்

By
Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆர்.பி.என். சிங் இன்று பாஜக-வில் இணைந்தார்.

உத்தரப்பிரதேச தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நேரத்தில், காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர், உத்தரப்பிரதேச மூத்த காங்கிரஸ் தலைவர் ஆர்.பி.என் சிங் இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக-வில் இணைந்துள்ளார்.

பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் வேலைகளில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

மாணவி தற்கொலை கட்டாய மதமாற்றம் உண்மை இல்ல, எங்க கட்சிதான் பெருசாக்குது -உண்மையை உடைத்த பாஜக பிரமுகர்மாணவி தற்கொலை கட்டாய மதமாற்றம் உண்மை இல்ல, எங்க கட்சிதான் பெருசாக்குது -உண்மையை உடைத்த பாஜக பிரமுகர்

2016ஆம் ஆண்டு, ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தில் உள்ள தியோரியாவில் இருந்து தனது கட் யாத்திரையைத் தொடங்கியபோது, ஆர்.பி.என். சிங், லலிதேஷ் திரிபாதி, ஜிதின் பிரசாதா மற்றும் இம்ரான் மசூத் ஆகியோர் நான்கு தூண்களாக அவருக்கு களமாடினர். ஆனால் இப்போது இந்த நான்கு கால்களும் இப்போது அடுத்தடுத்து தகர்ந்துள்ளன. ஆம், காங்கிரசை விட்டு வெளியேறிய நான்காவது தூண், ஆர்.பி.என்.சிங். உ.பி.யில் பிரியங்கா காந்தி தலைமையை இது கேள்விக்குறியாக மாற்றிவிட்டது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசம்

உத்தர பிரதேசத்தில் கட்சி தாவும் படலம் தொடர்கிறது. இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தின் மிக முக்கிய தலைவரான சுவாமி பிரசாத் உள்ளிட்டோர் பாஜகவில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர். அதேசமயம் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம்சிங்கின் மருமகள் அபர்னா யாதவ் அண்மையில் பாஜகவில் இணைந்தார்.

 கட்சித்தாவல்

கட்சித்தாவல்

அதுபோலவே உத்தரப்பிரதேச‌ காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜிதின் பிரசாதா காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். தற்போது காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சரும், உத்தரப்பிரதேச மூத்த காங்கிரஸ் தலைவர் ஆர்.பி.என் சிங் காங்கிரஸில் இருந்து இன்று விலகியுள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்துள்ளார்.

விலகல்

விலகல்

அந்தக்கடிதத்தில், காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி கொள்வதாகவும், கட்சிக்கும், மக்களுக்கும் சேவையாற்ற வாய்ப்பளித்ததற்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார் சிங். ''இது எனது புதிய தொடக்கம். பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் தலைமையின் கீழும், வழிகாட்டுதலின்படியும் நாட்டை கட்டமைக்கும் பணியில் நானும் பங்கு கொள்கிறேன்.

 பாஜக‌

பாஜக‌

நாடு இன்று நமது குடியரசு தினத்தை கொண்டாடும் நேரத்தில் இருக்கிறது. இந்த சமயத்தில் எனது அரசியல் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறேன். ஜெய் ஹிந்த்'' என டிவிட்டரில் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இதையடுத்து டெல்லியில், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், அனுராக் தாகூர் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் ஆர்.பி.என் சிங் இணைந்தார்.

 பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் இதுகுறித்து கூறுகையில், ''காங்கிரஸ் கட்சி போராடும். போராட்டத்தால் மட்டுமே போரை துணிச்சலுடன் எதிர்கொள்ள முடியும். அதற்கு தைரியம், வலிமை தேவை, கோழைகளால் அதை எதிர்த்துப் போராட முடியாது என்று தெரிவித்துள்ளார்''.

English summary
A senior Congress leader and former Union Minister RPN Singh today joined the BJP. He has sent his resignation letter to Congress leader Sonia Gandhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Desktop Bottom Promotion