டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிணையக் கைதியாக 20 குழந்தைகள்.. கொலையாளி மிரட்டல்.. சுற்றி வளைத்த போலீஸ்.. கடும் சண்டை.. உ.பி.யில்

Google Oneindia Tamil News

டெல்லி: உத்தரபிரதேச மாநிலத்தில் ஜாமீனில் வெளிவந்த கொலையாளி ஒருவர், பிறந்தநாள் கொண்டாட்டம் என்று கூறி, தனது வீட்டுக்கு குழந்தைகளை அழைத்து வந்து, அவர்களை பிணையக் கைதியாக பிடித்து வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் அந்த வீட்டை முற்றுகையிட்ட நிலையில், அவர்கள் மீது கையெறி குண்டுகளை அந்த நபர் வீசியதால் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

Uttar Pradesh: More than 15 children, and a few women, have been held hostage at a house

உத்தரப்பிரதேச மாநிலம் ஃபாருக்காபாத் என்ற பகுதியில் இந்த திகில் சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த குற்றவாளியின் பெயர் சுபாஷ் பாதம். 15-க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகள் மற்றும் பெண்கள் என சுமார் 20 பேரை இவர் பிணையக் கைதியாக பிடித்து வைத்துள்ளார்.

தகவல் அறிந்ததும், அந்த வீட்டை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். அப்போது வீட்டின் மேல் நின்றபடி போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். மேலும் கையெறி குண்டுகளையும் அவர் வீசியுள்ளார்.

 ஜாமியா துப்பாக்கி சூடு.. குற்றவாளி பேஸ்புக் கணக்கு முடக்கம்.. ஆதரவு பதிவுகளும் நீக்கப்படும் ஜாமியா துப்பாக்கி சூடு.. குற்றவாளி பேஸ்புக் கணக்கு முடக்கம்.. ஆதரவு பதிவுகளும் நீக்கப்படும்

இதனால், அந்த பகுதியே போர்க்களம் போல காட்சி அளிக்கிறது. காவல்துறையினர் அதிரடியாக ஏதாவது நடவடிக்கை எடுத்தால், பிணையக் கைதியாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து வரும் என்பதால் மிகவும் எச்சரிக்கையோடு செயல்பட்டு வருகின்றனர்.

சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. எனவே, சம்பவ இடத்திற்கு தீவிரவாத எதிர்ப்பு படையைச் சேர்ந்த ஒரு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, காவல்துறை எந்த மாதிரி நடவடிக்கை எடுக்கப் போகிறது? குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பு கிடைக்குமா? என்பது போன்றவற்றில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

English summary
Farrukhabad Police: More than 15 children, and a few women, have been held hostage at a house by a man. Incident of firing has also taken place. Operation to rescue them is underway. Senior police officers are present at the spot.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X