டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோர்பேவாக்ஸ் தடுப்பூசி விலை திடீர் சரிவு! அதிரடியாய் குறைத்த பையோலாஜிகல்-இ! என்ன காரணம் தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி : உயிரியல் தடுப்பூசியான கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை 12-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு செலுத்த கடந்த ஏப்ரல் மாதம் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்த நிலையில், அதன் விலையை 840 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக பயோலாஜிகள் - E நிறுவனம் கூறியுள்ளது.

2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த வைரஸ் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கியதோடு, உலக அளவில் பெரும் பொருளாதார இழப்பையும் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற சூழ்நிலையும் உருவாக்கியது.

அடுத்தடுத்து உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் மீண்டும் ஆட்டத்தை துவக்கிய நிலையில், ஜூன் மாதம் 4வது அலை உருவாகலாம் எனவும், வாய்ப்பே இல்லை எனவும் இருவேறு கருத்துகள் உலாவுகின்றன.

கொரோனா விதிமீறல் வழக்குகள் ரத்து, ஆனால்.. 'அவங்களுக்கு மட்டும் செக்’ வைத்த டிஜிபி சைலேந்திரபாபு!கொரோனா விதிமீறல் வழக்குகள் ரத்து, ஆனால்.. 'அவங்களுக்கு மட்டும் செக்’ வைத்த டிஜிபி சைலேந்திரபாபு!

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

இந்நிலையில் மேலும் நோய் பாதிப்பை தடுக்க கடந்த 2 ஆண்டுகளாக மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்காக கணிசமான தொகையை செலவு செய்து வருகின்றன உலக நாடுகள். தடுப்பூசி தான் மக்களை காக்கும் பேராயுதம் என உலக சுகாதார அமைப்பும், உலக நாடுகளின் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெரும்பான்மையான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கோர்பேவாக்ஸ் ஊசி

கோர்பேவாக்ஸ் ஊசி

இந்நிலையில் கோர்பேவாக்ஸ் என்ற புதிய கொரோனா தடுப்பூசியை 12 - 18 வயது சிறுவர் சிறுமியர்களுக்கு செலுத்தலாம் என்று மத்திய மருத்துவ தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் அனுமதி அளித்தது. இந்தியாவில் ஏற்கனவே, கோவிஷீல்டு, கோவாக்சின், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனம், அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் இணைந்து கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியை கண்டுபிடித்தது.

திடீர் விலை குறைப்பு

திடீர் விலை குறைப்பு

தற்போது, ​​12-15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 3 கோடி டோஸ் கோர்பேவாக்ஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சிறார்களுக்கான கோவிட்-19 தடுப்பூசி பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மூலம் 15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஜனவரி 3 முதல் தொடங்கியது. கோர்பேவாக்ஸ் தற்போது 12-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் நிலையில் பயோலாஜிக்கல் இ லிமிடெட் நிறுவனம் 30 கோடி டோஸ் கோர்பேவாக்ஸ் தடுப்பூசிகளை தயாரித்து, கிட்டத்தட்ட 10 கோடி டோஸ்களை மத்திய அரசுக்கு ஏற்கனவே வழங்கியுள்ளது.

போட்டியை சமாளிக்க முடிவு

போட்டியை சமாளிக்க முடிவு

இந்நிலையில் கோர்பேவாக்ஸ் தடுப்பூசியின் விலை டோஸ் ஒன்றுக்கு முந்தைய விலையான ரூ. 840லிருந்து ரூ. 250 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது என்று பயோலாஜிக்கல் இ லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் வரி மற்றும் நிர்வாகக் கட்டணங்கள் உட்பட ஒரு டோஸ் விலை ரூ.400 ஆக இருக்கும் என்று மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு தடுப்பூசியை தயாரித்து மத்திய அரசுக்கு வழங்கி வரும் நிலையில் போட்டியைச் சமாளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

English summary
The biological vaccine For Corona corbevax has reduced the price of the vaccine from Rs 840 to Rs 250, according to Biologists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X