டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோத்தபாய ராஜபக்சே இன்று இந்தியா வருகை- டெல்லியில் வைகோ தலைமையில் போராட்டம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Gotabaya Rajapaksa’s victory in Sri Lanka: It’s a sad day for Tamils, Vaiko says

    டெல்லி: இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே இன்று 2 நாட்கள் பயணமாக இந்தியா வருகை தருகிறார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இலங்கையின் புதிய அதிபராக அண்மையில் கோத்தபாய ராஜபக்சே பொறுப்பேற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.

    Vaiko leads protest against Gotabaya Rajapaksas India visit

    மேலும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இலங்கை சென்று கோத்தபாயவை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவுக்கு வருகை தர முறைப்படி கோத்தபாயவுக்கு அழைப்பு விடுத்தார் ஜெய்சங்கர்.

    இதனை ஏற்று தாம் இந்தியா வருவதாக கோத்தபாய அறிவித்தார். ஆனால் கோத்தபாயவின் இந்திய வருகைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஈழத் தமிழர் இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி என்பதால் கோத்தபாயவை இந்தியா அனுமதிக்கக் கூடாது என்பது தமிழக தலைவர்களின் கருத்து.

    இந்நிலையில் இன்று 2 நாட்கள் பயணமாக கோத்தபாய ராஜபக்சே டெல்லி வருகை தருகிறார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் வைகோ தலைமையில் மதிமுகவினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பேசிய வைகோ, கோத்தபாயவை இந்தியா நம்பக் கூடாது; கோத்தபாய எப்போதும் சீனாவின் நண்பர்; இந்தியாவுக்கு நண்பராக இருக்கவே மாட்டார் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றார். முன்னதாக மதிமுகவின் தொண்டர் அணியினர் கருப்பு சீருடையில் பேரணியும் நடத்தினர்.

    English summary
    MDMK cadre led by party General Secretary and Rajyasabha MP Vaiko staged a black flag demonstration against Srilankan President Gotabaya Rajapaksa's India Visit.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X