டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் எமர்ஜென்சி.. காஷ்மீர் குறித்து வைகோ ஆவேசம்.. சமாதானம் செய்த வெங்கய்யா நாயுடு

Google Oneindia Tamil News

Recommended Video

    Vaiko | kashmir | இந்தியாவில் எமர்ஜென்சி.. காஷ்மீர் குறித்து வைகோ ஆவேசம்

    டெல்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் குறித்து ராஜயசபாவில் பேசிய வைகோ, இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு இருப்பது போல் உள்ளதாக தெரிவித்தார்.

    ராஜ்யசபாவில் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசன பிரிவு 370 ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவித்தது. இதற்கான அறிவிப்பை ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்து பேசினார்.

    vaiko says on rajya sabha, emergency in india over kashmir issue

    அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆவேச முழக்கமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்தைச் சேர்ந்த திமுக எம்பிக்கள் , காங்கிரஸ் எம்பிக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அப்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதன் மூலம் மத்திய அரசு ஜனநாயகத்தை கொலை செய்கிறது. நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது போல் இருக்கிறது. நெருக்கடி நிலை இந்தியாவில் வந்துவிட்டது. என இருமுறை கூறினார்.

    அதற்கு பதில் அளித்த ராஜ்யசபா தலைவர் வெங்கய்யா நாயுடு, எந்த எமர்ஜென்சியும் இல்லை என்றும், எது அர்ஜென்சி அதாவது அவசரம் என்றும் கூறியதோடு, இதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் வைகோ என்று கூறினார்.

    English summary
    mdmk general secretary vaiko says on rajya sabha, emergency in india over kashmir issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X