மேற்கு வங்க சிறுமி பலாத்காரம்! பாஜக சார்பில் உண்மை கண்டறியும் 5 பேர் குழு.. வானதி, குஷ்பூவுக்கு இடம்
டெல்லி : மேற்கு வங்க மாநிலம் நாடியாவில் மைனர் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை பாஜக தலைவர் ஜேபி நட்டா அமைத்துள்ளார். இந்த குழுவில் தமிழகத்தில் இருந்து வானதி சீனிவாசன், குஷ்பு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில், நதியா மாவட்டத்தில் 14 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டு உயிரிழந்தார்.
5 தலைமுறையினர் ஒரே வீட்டில்! ஆசிர்வாதம்! கண்ணுப்பட போகுது.. ஆனந்த் மகிந்திராவின் நெகிழ்ச்சி வீடியோ
இந்த வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் பஞ்சாயத்து தலைவரின் மகன் மீது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மம்தா பானர்ஜி சர்ச்சை
குற்றம் சாட்டப்பட்டவர் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவகள் தெரிவிக்கும் நிலையில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக அம்மாநில காவல்துறை , முதல்வர் மம்தா பானர்ஜியும் செயல்படுவதாக பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதற்கு காரணம் மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கூறிய கருத்து.

கடும் எதிர்ப்பு
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதுகுறித்து பேசுகையில், "பாதிக்கப்பட்ட பெண் "உண்மையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா அல்லது காதல் விவகாரத்தில் இருந்ததால் கர்ப்பமானாரா? எனக் கேள்வி எழுப்பியனார். திங்களன்று நடந்த பிஸ்வா பங்களா மேளா பிரங்கன் தொடக்க விழாவில் உரையாற்றிய பானர்ஜி, "அவர் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? மரணத்திற்கான காரணத்தை காவல்துறை இன்னும் கண்டறியவில்லை. நான் அவர்களிடம் கேட்டேன்.

மகளிர் ஆணையம் கண்டனம்
அவர் கர்ப்பமாக இருந்தாரா அல்லது காதல் விவகாரமா அல்லது நோய்வாய்ப்பட்டதா? அது காதல் விவகாரம் என்று குடும்பத்தினருக்கு கூட தெரியும். ஒரு ஜோடி உறவில் இருந்தால், நான் அவர்களை எப்படி நிறுத்துவது?" கூட்டு பலாத்கார வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தாலைவர் மம்தாவின் கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தயாரும், தேசிய மகளிர் ஆணையமும் கூட இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

உண்மை கண்டறியும் குழு
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் நாடியாவில் மைனர் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை பாஜக தலைவர் ஜேபி நட்டா அமைத்துள்ளார்.இந்தக் குழு தனது அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேற்கு வங்க மாநிலம் நாடியாவில் உள்ள ஹன்ஸ்காலியில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இடத்தைப் பார்வையிட 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை தேசியத் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா பரிந்துரை செய்துள்ளார். குழு விரைவில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்" என்றார்.

வானதி, குஷ்புவுக்கு இடம்
இந்தக் குழுவில் மக்களவை உறுப்பினரும் தேசிய துணைத் தலைவருமான ரேகா வர்மா, உத்தரப் பிரதேச கேபினட் அமைச்சர் பேபி ராணி மவுரியா, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் மகளிர் பிரிவு தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன், சிறப்பு அழைப்பாளராக தேசிய செயற்குழு குஷ்பு சுந்தர், மேற்கு வங்காள எம்எல்ஏ. ஸ்ரீரூபா மித்ரா சவுத்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தேசிய அளவிலான பிரச்சினை குறித்து விசாரிக்க தமிழகத்தைச் சேர்ந்த இரு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளது தமிழக பாஜக வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.