டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆரம்பிச்ச முதல் நாளே ஒன்றேகால் மணி நேரம் லேட்.. வந்தே பாரத் ரயிலில் வந்த பயணிகள் புலம்பல்!

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் அதிவேகமான... பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி 20 நிமிடங்கள் தாமதமாக வந்து சேர்ந்த்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்கும் நோக்கில், மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய ரயிலை சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலை தயாரித்தது. ரயிலில் இன்ஜின் இல்லாமல் அதிவேகமாக இயங்கக்கூடிய இந்த ரயிலுக்கு வந்தே பாரத் எனப் பெயரிபட்டது.

Vande bharat express runs 1 hour 20 mins late on day one of commercial run

டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த விழாவில் பிரதமர் மோடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். டெல்லியில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் வாராணசி வரையிலான தனது முதல் பயணத்தை வந்தே பாரத் ரயில் தொடங்கியது.

அதன் பின்னர்.. டெல்லியில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில் வெற்றிகரமாக வாரணாசி சென்றடைந்த நிலையில், வாரணாசியில் இருந்து புறப்பட்டு டெல்லிக்கு வந்தது. அப்போது, டெல்லிக்கு முன்பாக 200 கி.மீ. தொலைவில் டுன்ட்லா எனும் இடத்தில் ரயில் பழுதடைந்து நின்றது. இது அனைவருக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந் நிலையில் தமது வர்த்தக ரீதியான முதல் பயணத்தை நேற்று காலை டெல்லியில் இருந்து வாரணாசிக்கு புறப்பட்டது. ஆனால்.... வாரணாசிக்கு 1 மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதமாக வந்து சேர்ந்தது.

நாட்டின் அதிவேக ரயில் என்ற அடையாளத்துடன் அறிமுகப் படுத்தப்பட்ட இந்த ரயில் தாமதமாக வந்து சேர்ந்தது பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால்.. அடுத்த இருவாரங்களுக்கு வந்தேபாரத் ரயில் டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Newly inaugurated Vande Bharat Express turned into a disappointment for its passengers as it reached 1 hour 20 minutes later than its designated time to its destination on its day 1 of commercial run.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X