டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வந்தே பாரத்: ஆஸி., சிங்கப்பூர் உட்பட மேலும் 13 நாடுகளுடன் விமான சேவைக்கு முயற்சி- அமைச்சர் தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: வெளிநாடுகளில், சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வந்தே பாரத் மிஷனின் கீழ் தாயகம் அழைத்து வருவதற்காக நமது அண்டை நாடுகளுடன் இருதரப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்தப்படுவதாக, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

இருதரப்பு விமான ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளின் விமான நிறுவனங்களும் சில கட்டுப்பாடுகளுடன் சர்வதேச விமானங்களை இயக்க முடியும். இருப்பினும், அண்டை நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் இடம்பெறவில்லை.

Vande bharat mission: India pushing for air bubbles with 5 neighbouring countries

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பகிர்ந்துள்ள பட்டியலில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் மற்றும் பூட்டான் ஆகியவை அடங்கும்.

சீனாவுடன் டென்ஷன் ஒருபக்கம்.. திடீரென பாகிஸ்தான் எல்லையில் தேஜஸ் போர் விமானங்களை குவித்த இந்தியாசீனாவுடன் டென்ஷன் ஒருபக்கம்.. திடீரென பாகிஸ்தான் எல்லையில் தேஜஸ் போர் விமானங்களை குவித்த இந்தியா

இந்த நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை, அந்த நாட்டின் விமானங்களை கொண்டே அழைத்துவர ஏற்பாடு நடக்கிறது. ட்விட்டரில் இந்த அறிவிப்பை வெளியிட்ட ஹர்தீப் சிங் பூரி, இதுபோன்ற ஏற்பாடுகளை மற்ற நாடுகளுடனும் பரிசீலிப்போம் என்றார்.
"வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைவது எப்போதுமே எங்கள் முயற்சியின் ஒரு அங்கம்." என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Vande bharat mission: India pushing for air bubbles with 5 neighbouring countries

வந்தே பாரத் தி்ட்டத்தின் கீழ் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், மாலத்தீவு ஆகிய நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர விமான சேவை ஏற்கனவே நடைபெறுகிறது.

Recommended Video

    விமானி எடுத்த தவறான முடிவுதான் விமான விபத்துக்கு காரணமா? | Oneindia Tamil

    அண்டை நாடுகளை தவிர்த்து, இதுபோன்ற சர்வதேச விமான போக்குவரத்தை விரிவுபடுத்த ஆஸ்திரேலியா, இத்தாலி, நியூசிலாந்து, நைஜீரியா, பஹ்ரைன், இஸ்ரேல், கென்யா, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சிங்கப்பூர், தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட 13 நாடுகளுக்கும் விமான போக்குவரத்தை தொடங்க பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன என்று ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.

    English summary
    Civil Aviation Minister Hardeep Singh Puri said that India has proposed to establish bilateral air bubble arrangements with our neighbours to bring back stranded Indians under the Vande Bharat Mission.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X