டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்போது இந்தியா பெயரை கேட்டாலே.. பதறியடித்து ஓடும் உலக நாடுகள்.. என்ன காரணம் தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால் பல்வேறு உலக நாடுகள் இந்தியாவுக்கான விமான சேவையை அதிரடியாக ரத்து செய்துள்ளது.

அடுத்த 30 நாட்களுக்கு இந்தியாவுக்கு விமானங்கள் இயக்கப்படாது என்று கனடா அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

எவரெஸ்ட் மலை சிகரத்தையும் விட்டு வைக்காத கொரோனா - மலையேற்ற வீரருக்கு தொற்று உறுதி எவரெஸ்ட் மலை சிகரத்தையும் விட்டு வைக்காத கொரோனா - மலையேற்ற வீரருக்கு தொற்று உறுதி

இந்தியா முதலிடம்

இந்தியா முதலிடம்

இந்தியாவில் கொரோனா தொற்று உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு கட்டுக்கடங்காமல் மிக அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பில் முதலிடம் வகித்து வந்த அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடம் பிடித்துள்ளது.

பெயரை கேட்டாலே அதிருதுல்ல

பெயரை கேட்டாலே அதிருதுல்ல

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3.32 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 2263 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தொற்று ஜெட் வேகத்தில் பரவி வருவதால் பல்வேறு பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு காலடி எடுத்து வைக்கவே பதறுகின்றன. இந்தியாவின் பெயரை கேட்டாலே மற்ற நாட்டு மக்கள் அஞ்சும் நிலையில்தான் நமது நாடு இருக்கிறது.

 விமானங்கள் ரத்து செய்த நாடுகள்

விமானங்கள் ரத்து செய்த நாடுகள்

இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவில் இருந்து துபாய்க்கு இயக்கப்படும் விமானங்களின் சேவை ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.இந்தியா - இங்கிலாந்து இடையிலான விமான சேவை நாளை முதல் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா கூறியுள்ளது.

கனடா அதிரடி தடை

கனடா அதிரடி தடை

இந்தியாவுடனான விமான சேவையை மே 3-ம் தேதி வரை ஹாங்காங் ரத்து செய்துள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளும் இந்தியாவுக்கான விமான சேவையை ஏற்கனவே ரத்து செய்துள்ளன. இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து விமானங்கள் வர கனடா அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. அடுத்த 30 நாட்களுக்கு இந்தியாவுக்கு விமானங்கள் இயக்கப்படாது என்று கனடா கூறியுள்ளது.

English summary
Various countries around the world have abruptly canceled flights to India due to the rapid spread of corona infection in India
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X