டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி அமைச்சரவை.. ஜேட்லி, உமாபாரதி அவுட்- அமித்ஷா, வசுந்தரராஜியே, சிவ்ராஜ்சிங்குக்கு வாய்ப்பு?

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடி அமைச்சரவையில் அமித்ஷா, சிவ்ராஜ்சிங்குக்கு வாய்ப்பு?

    டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் அருண்ஜேட்லி, உமாபாரதி உள்ளிட்டோருக்கு இடம் கிடைக்காது என்றும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரராஜியே சிந்தியா மற்றும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகானுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் எனவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பிரதமர் மோடி தலைமையில் 85 அமைச்சர்கள் இருந்தனர். இவர்களில் 38 பேர் கேபினட் அமைச்சர்கள். 11 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள்; 36 பேர் இணை அமைச்சர்களாக இருந்தனர்.

    சூடுபட்ட சூடுபட்ட "புலி".. இனி பாயுமா பாயாதா.. பவன் கல்யாண் ஆட்டம் முடிவுக்கு வந்தது

    அமித்ஷா உள்துறை அமைச்சர்?

    அமித்ஷா உள்துறை அமைச்சர்?

    தற்போது அமைய இருக்கும் புதிய அரசில் நிறைய புதுமுகங்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது. பாஜகவை அரியாசனத்தில் அமர்த்திய அமித்ஷாவுக்கு உள்துறை அமைச்சர் பதவி கிடைக்கலாம்.

    குஜராத் என்கவுண்டர்

    குஜராத் என்கவுண்டர்

    குஜராத் முதல்வராக மோடி இருந்த போது அமித்ஷா, உள்துறை அமைச்சராக இருந்தார். அப்போதுதான் போலி என்கவுண்ட்டர் வழக்கில் அமித்ஷா கைதும் செய்யப்பட்டார் என்கிற ஒரு வரலாறும் இருக்கிறது.

    நிதி அமைச்சர் பியூஷ் கோயல்?

    நிதி அமைச்சர் பியூஷ் கோயல்?

    நிதி அமைச்சராக இருந்த அருண்ஜேட்லி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவருக்கு இம்முறை வாய்ப்பு கிடைக்காது. பியூஸ் கோயலுக்கு ரயில்வே மற்றும் நிதி துறைகள் ஒதுக்கப்படலாம்.

    பிரக்யாசிங்குக்கு பதவி?

    பிரக்யாசிங்குக்கு பதவி?

    பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான உமாபாரதிக்கும் இம்முறை அமைச்சரவையில் இடம் கிடைக்காதாம். அவருக்கு பதில் சர்ச்சைக்குரிய சாத்வி பிரக்யாசிங்குக்கு வாய்ப்பு கிடைக்கலாம். அமேதியில் ராகுலை தோற்கடித்த ஸ்மிருதி இரானிக்கு மீண்டும் மனித வளமேம்பாடு மற்றும் ஜவுளித்துறை கிடைக்கலாம்.

    மாஜி முதல்வர்கள்

    மாஜி முதல்வர்கள்

    முன்னாள் முதல்வர்களான வசுந்தரராஜியே சிந்தியா மற்றும் சிவ்ராஜ்சிங் சவுகான் ஆகியோரும் மோடி அமைச்சரவையில் இடம்பெறக் கூடும். சுஷ்மா ஸ்வராஜும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கும் வாய்ப்பு கிடைக்காதாம். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் செல்லப்பிள்ளையான நிதின் கட்காரிக்கு சாலைப்போக்குவரத்து துறையே மீண்டும் ஒதுக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றன டெல்லி தகவல்கள்..

    English summary
    Sources said that Former Chief Ministers Vasundhara Raje, Shivraj Singh will get chance in PM Modi's new cabinet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X