டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மறக்க முடியுமா... 40 ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை... புல்வாமா தாக்குதல் நினைவு தினம் இன்று!

Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 2019-ல் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனங்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டத்தில் 40 ராணுவ வீரர்கள் இறந்தனர். இந்த தாக்குதல் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Recommended Video

    நாட்டையே அதிர வைத்த புல்வாமா தாக்குதல்… 40 வீரர்களை இழந்த நாள்!

    புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

    முப்படை ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் ராணுவ வீரர்களுக்கு மரியாதையை செலுத்தினார்கள்.

    பயங்கரவாதம் உலகின் எதிரி

    பயங்கரவாதம் உலகின் எதிரி

    இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதும் அச்சுறுத்தி வரும் ஒரே எதிரி பயங்கரவாதம். இந்தியாவும் அடிக்கடி பயங்கராத தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது. இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை அனுப்ப பாகிஸ்தான் பெருமளவில் உதவி செய்து வருகிறது. மும்பையில் நடந்த கோரமான பயங்கரவாதிகள் தாக்குதலை இந்தியா என்றும் மறக்காது .இதேபோல் நமது நாடு பயங்கரவாதிகளிடம் இருந்து எதிர்கொண்ட மற்றோரு தாக்குதல் புல்வாமா தாக்குதல் ஆகும்.

    புல்வாமா தாக்குதல்

    புல்வாமா தாக்குதல்

    நமது மக்களின் உயிரை காக்கும் பாதுகாப்பு படையினர் மீதே கை வைத்து விட்டனர் பயங்கரவாதிகள். ஆம்.. கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி இதே நாளில் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனங்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. ஸ்ரீநகர்- ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினர் வீர மரணம் அடைந்னர். தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஒருவனும் உயிரிழந்தனர்.

    40 வீரர்கள் உயிர் தியாகம்

    40 வீரர்கள் உயிர் தியாகம்

    நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சோகம் என்றும் நம் மனதில் இருந்து அகலாது. இந்த தாக்குதலுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் எல்லைக்கு சென்று பயங்கரவாத முகாம்களை அழித்தது. 40 வீரர்களின் உயிர் தியாகம் செய்தபிறகும் பயங்கரவாதிகளை நாம் முழுமையாக ஒடுக்க முடியவில்லை. இந்த சோமான புல்வாமா தாக்குதல் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    வெங்கய்ய நாயுடு மரியாதை

    வெங்கய்ய நாயுடு மரியாதை

    இந்த நிலையில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள். முப்படை ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் ராணுவ வீரர்களுக்கு மரியாதையை செலுத்தினார்கள். வெங்கய்ய நாயுடு டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், 'பிப்ரவரி 14, 2019 அன்று புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் இறந்த துணிச்சலான சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு நான் ஒரு தாழ்மையான அஞ்சலி செலுத்துகிறேன். தியாகிகளின் குடும்பங்களுக்கு நான் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் அழியாத தியாகத்தை தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் என்று கூறியுள்ளார்.

    நாடு மறக்காது

    நாடு மறக்காது

    பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த துணிச்சலான நமது வீரர்களுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். தேசத்திற்கான அவர்களின் சேவையையும் அவர்களின் உயர்ந்த தியாகத்தையும் இந்தியா ஒருபோதும் மறக்காது. இந்த தாக்குதலால் துன்பப்பட வேண்டிய அவர்களது குடும்பங்களுடன் நாங்கள் தொடர்ந்து நிற்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    நாடு கடன்பட்டுள்ளது

    நாடு கடன்பட்டுள்ளது

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீர‌ர்களுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதலை தெரிவித்துள்ளார். இந்த நாடே உங்களுக்கு கடன்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Vice President Venkaiah Naidu and Defense Minister Rajnath Singh paid tributes to the soldiers killed in the Pulwama attack
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X