டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னங்க.. பாஜக அமைச்சரவையில் ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சர்தானா.. தேட வேண்டியதால்ல இருக்கு!

Google Oneindia Tamil News

Recommended Video

    Cabinet Ministers List: மத்திய அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை ஒதுக்கீடு?.. முழு தகவல்- வீடியோ

    டெல்லி: மத்திய அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இதற்கு லோக்சபா தேர்தலில் பெரியக் கட்சிகள் முஸ்லிம் வேட்பாளர்களை போதுமான அளவு களம் இறக்காததே காரணம் என்று கூறப்படுகிறது.

    57 அமைச்சர்களை உள்ளடக்கிய மோடி அரசு நேற்று முன்தினம் இரவு பதவியேற்றது. இதில் 24 அமைச்சர்கள் கேபினட் அமைச்சர்களாகவும் 24 பேர் இணை அமைச்சர்களாகவும், 9 பேர் தனிப் பொறுப்புடன் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.

    இதில் பலருக்கு புதிதாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு நேற்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

    நாடாளுமன்றத்தில் கால் வைத்த கரூர் புயல்.. பொறுத்திருந்து பார்ப்போம் ஜோதிமணி செயலை! நாடாளுமன்றத்தில் கால் வைத்த கரூர் புயல்.. பொறுத்திருந்து பார்ப்போம் ஜோதிமணி செயலை!

    இலாகா ஒதுக்கீடு

    இலாகா ஒதுக்கீடு

    அதன்படி மோடியின் நெருங்கிய நண்பரும் பாஜகவின் தேசிய தலைவருமான அமித்ஷாவுக்கு உள்துறை அமைச்சகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிதித்துறை கடந்த முறை பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஒரே ஒரு அமைச்சர்தான்

    ஒரே ஒரு அமைச்சர்தான்

    இந்நிலையில் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளனர். பிரதமர் மோடி உட்பட 58 பேர் உள்ள அமைச்சரவையில் ஒரே ஒரு இஸ்லாமிய அமைச்சர்தான் உள்ளார்.

    முக்தர் அபாஸ் நக்வி

    முக்தர் அபாஸ் நக்வி

    அவர்தான் முக்தர் அபாஸ் நக்வி. 61 வயதான பாஜகவின் மூத்த தலைவரான முக்தர் அபாஸ் நக்வி, ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார். மத்திய அமைச்சரவையில் மீண்டும் இடம்பெற்றிருக்கும் அவருக்கு சிறுபான்மையினர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது.

    27 இஸ்லாமிய எம்பிக்கள்

    27 இஸ்லாமிய எம்பிக்கள்

    17வது மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் 27 இஸ்லாமியர்கள் மட்டுமே எம்பிக்களாக தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 17 கோடிக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்.

    77 எம்பிக்கள் இருந்திருக்க வேண்டும்

    77 எம்பிக்கள் இருந்திருக்க வேண்டும்

    அதாவது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையான 133 கோடியில் 14 சதவீதமாகும். இந்தியாவில் இஸ்லாமிய மக்கள் சதவீதத்தை மட்டும் பார்தோமேயானால் 77 பேர் லோக்சபா எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

    வெறும் 27 பேர் மட்டுமே

    வெறும் 27 பேர் மட்டுமே

    ஆனால் வெறும் 27 பேர் மட்டுமே லோக்சபா எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 1952 முதல் 2014ஆம் ஆண்டு வரை நடைபெற்ற லோக் சபா தேர்தல்களில் சராசரியாக 30 முஸ்லிம் எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    குறைந்துவிட்டது

    குறைந்துவிட்டது

    1980 - 1984 வரை லோக்சபாவில் 9 சதவீத இஸ்லாமியர்கள் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது இஸ்லாமிய எம்பிக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.

    இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை

    இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை

    இதற்கு காரணம் பெரிய கட்சிகள் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்காததே என கூறப்படுகிறது. மேலும் இஸ்லாமியர்களுக்கு நியாயமான எண்ணிக்கையில் போட்டியிட வாய்ப்புக் கொடுத்த காங்கிரஸ் கட்சி இரண்டு பொதுத் தேர்தல்களிலும் பெரும் சரிவை சந்தித்ததும் காரணம் என கூறப்படுகிறது.

    காங்கிரஸ் 7 சதவீதம்

    காங்கிரஸ் 7 சதவீதம்

    நாட்டின் பெரியக் கட்சிகளாக கருதப்படும் பாஜக மற்றும் காங்கிரஸ் மிகக்குறைந்த அளவிலேயே இஸ்லாமியர்கள் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது. அதாவது காங்கிரஸ் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் 7 சதவீத இஸ்லாமிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கிறது.

    பாஜக வெறும் 1 சதவீதம்

    பாஜக வெறும் 1 சதவீதம்

    அதேநேரத்தில் இந்துத்துவா கொள்கைகளை பெரிதும் முன்னிறுத்தி வரும் பாஜக லோக்சபா தேர்தலில் 1 சதவீத இஸ்லாமிய வேட்பாளர்களுக்கு மட்டுமே இடம் அளித்துள்ளது. இது 1952 முதல் 2014 வரை நடைபெற்ற லோக்சபா தேர்தல் கணக்கின்படி என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Very less number of Muslim Ministers in the cabinet and in the lok sabha only 27 MPs.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X