டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண் போலீஸ் அதிகாரியை சரமாரியாக தாக்கிய வக்கீல்கள்.. ஷாக் வீடியோ வெளியானது

Google Oneindia Tamil News

Recommended Video

    பெண் போலீஸ் அதிகாரியை சரமாரியாக தாக்கிய வக்கீல்கள்

    டெல்லி: டெல்லியில் தீஸ் ஹஸாரி கோர்ட் வளாகத்தில் வக்கீல்கள், போலீஸாருக்கு இடையே நடந்த பெரும் மோதலில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவரை வக்கீல்கள் தாக்கிய சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த வன்முறைத் தாக்குதலும், வக்கீல்கள் மீதான வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்படும் என்று டெல்லி போலீஸ் அறிவித்துள்ளது.

    video clip showing a woman police officer was beaten by advocates emerge

    இரு போலீஸார் பேசிய ஆடியோ கிளிப் வெளியான அடுத்த நாள் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. தாக்குதலுக்குள்ளான பெண் அதிகாரி கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் ஆவார்.

    அவரது பிஸ்டலைப் பிடுங்கிக் கொண்டு வக்கீல்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதைத் தடுக்க முயன்ற இன்னொரு போலீஸ்காரரையும் சரமாரியாக தாக்கியுள்ளது அந்தக் கும்பல். இதைத்தான் அந்த ஆடியோவில் அந்த இரு போலீஸாரும் பேசியிருந்தனர். இந்த ஆடியோ கிளிப் குறித்து தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வீடியோ கிளிப் வெளியாகியுள்ளது.

    க்ளைமேக்ஸ் கட்டத்தில் மகாராஷ்டிரா அரசியல்.. சிவ சேனா தலைவரை சந்திக்கிறார் கட்கரிக்ளைமேக்ஸ் கட்டத்தில் மகாராஷ்டிரா அரசியல்.. சிவ சேனா தலைவரை சந்திக்கிறார் கட்கரி

    அதில் அந்தப் பெண் அதிகாரி தாக்கப்படும் காட்சி உள்ளது. தலைமுடியைப் பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அவரது தோள்பட்டையைப் பிடித்து இழுத்துச் சென்றுள்ளனர். கீழே தள்ளி விட்டுள்ளனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட அனைவருமே ஆண் வக்கீல்கள். அவரை கெட்ட கெட்ட வார்த்தையாலும் திட்டியுள்ளனர்.

    இதற்கிடையே சம்பவம் குறித்து தனது உயர் அதிகாரிகளிடம் அந்த பெண் அதிகாரி விளக்கியுள்ளார். தன்னை வக்கீல்கள் தரக்குறைவாக நடத்தியதாகவும், அசிங்கமாக பேசியதாகவும், உடம்பில் கை வைத்து பிடித்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தான் வைத்திருந்த 9 மில்லிமீட்டர் பிஸ்டலையும் பறித்துக் கொண்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

    அதேசமயம், இதுதொடர்பாக அவர் புகார் ஏதும் கொடுக்கவில்லை. புகார் கொடுத்தும் நடவடிக்கை இருக்கப் போவதில்லை என்பதால் அவர் புகார் தரவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள வீடியோவைத் தொடர்ந்து இந்த சம்பவத்தையும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப் போவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    A video clip showing a woman police officer was beaten by advocates has emerged during the Tis Hazari court in Delhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X