டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பணத்தை டேபிளில் தூக்கி வைத்தாலும் பிரதமர் வாங்க மாட்டேன் என்கிறார்.. விஜய் மல்லையா பரபர ட்வீட்

Google Oneindia Tamil News

லண்டன்: கடனை திரும்ப செலுத்த தான் தயாராக இருப்பதாகவும், ஆனால் மத்திய அரசுதான் அனுமதிக்கவில்லை என்றும், வங்கிக் கடன் மோசடி மன்னன் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இங்கிலாந்தில் இருந்தபடி அவர் வெளியிட்டுள்ள தொடர் ட்வீட்டுகளை பாருங்கள்:

இந்திய மீடியாக்களில், நான் சொத்துக்களை மறைத்து வைத்துள்ளதாக செய்திகள் வெளியிடப்படுகிறது. அப்படியானால், நீதிமன்றங்கள் முன்பாக ரூ.14000 கோடி சொத்துக்கள் இருப்பதாக எப்படி வெளிப்படையாக தெரிவிக்க முடியும்? மக்களை தவறான பாதைக்கு இந்த மீடியாக்கள் அழைத்துச் செல்கின்றன.

Vijay Mallya tweets, says he is ready to pay back to banks, but govt not allowing it

கர்நாடகா ஹைகோர்ட் முன்னிலையில், செட்டில் செய்ய விரும்பினேன். இது நேர்மையான ஒரு முடிவு. ஷூ இப்போது இன்னொரு காலில் இருக்கிறது. ஏன் இந்த பணத்தை வங்கிகள் ஏற்க மறுக்கின்றன?

எதற்காக பிரதமர், நான் டேபிளில் தூக்கி வைத்த பிறகும் அந்த பணத்தை திரும்ப பெற வங்கிகளுக்கு அறிவுறுத்தவில்லை. அப்படி ஏற்றுக்கொண்டால், கிங்பிஷருக்கு கொடுத்த முழு கடனையும் மீட்டுவிட்ட பெருமையை பிரதமர் பெற்றுக்கொள்ளலாமே.

நாடாளுமன்றத்தில் பிரதமர் நிறைவுரையாற்றியது எனது கவனத்திற்கும் வந்தது. அவர் ஒரு சிறந்த பேச்சாளர்தான். அவர் தனது உரையில் 9000 கோடியை கொண்டு ஓடிவிட்டதாக பெயரை குறிப்பிடாமல் பேசினார். மீடியாக்கள் எனது பெயரைத்தான் அதிலும் இழுத்துவிட்டன. இவ்வாறு மல்லையா தனது ட்வீட்டுகளில் கூறியுள்ளார்.

English summary
I respectfully ask why the Prime Minister is not instructing his Banks to take the money I have put on the table so he can at least claim credit for full recovery of public funds lent to Kingfisher- Vijay Mallya
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X