டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காலம் கலிகாலம் ஆகி போச்சுடா.. ரயிலில் விநாயகருக்கும் ரிசர்வேஷன்.. ஹாயாக அமர்ந்து வரும் கலர் கணேசா!

Google Oneindia Tamil News

டெல்லி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த இரு மாதங்களாக உருவாக்கப்பட்டு வந்த விநாயகர் சிலைகள் விழா முடிந்ததும் ஒரு வாரத்துக்கு பிறகு கடலில் கரைக்கப்படுகிறது.

சிலைகளில் கலந்துள்ள பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பெயின்ட் ஆகியவற்றால் நீர் நிலைகளுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர்கள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளையும் பார்ப்போம்.

விநாயகர் சதுர்த்தி கோலாகலம்: பிள்ளையார்பட்டி, தஞ்சை மெலட்டூரில் தேரோட்டம்விநாயகர் சதுர்த்தி கோலாகலம்: பிள்ளையார்பட்டி, தஞ்சை மெலட்டூரில் தேரோட்டம்

1000 ஆண்டுகள் பழைமை

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தர் காடுகளில் 1100 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. நாகவன்ஷி ஆட்சிக் காலத்தில் இந்த விநாயகர் உருவாக்கப்பட்டு மலையின் உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மலை பஸ்தர் காட்டிலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது.

தேங்காய்

கர்நாடக பெங்களூரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி ஒரு கோயிலில் 9000-க்கும் மேற்பட்ட தேங்காய்ளை கொண்டு உருவாக்கப்பட்ட விநாயகர்.

பொருட்கள்

சுற்றுச்சூழலை பாதுகாக்க அழைப்பு விடுக்கும் பிரதமர் மோடியுடன் இணைந்து நாமும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மறுப்போம். விநாயகர் சதுர்த்தியையொட்டி ஒடிஸா புரி கடற்கரையில் பிளாஸ்டிக்கை புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சுதர்சன் பட்நாயக் உருவாக்கிய மணல் விநாயகர்.

விநாயகர் சிலை

இந்தோனேஷியாவில் உள்ள பிரம்பனான் கோயிலில் உள்ள விநாயகர் சிலை.

தாய்லாந்து கணேசா

தாய்லாந்து நாட்டில் கணேசா பார்க்கில் உள்ள மிகப் பெரிய விநாயகர் சிலை.

வாழைப்புழ விநாயகர்

இது பழைய புகைப்படம்தான். இருந்தால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவகையிலும் பசியை தூண்டும் வகையில் வாழைப்பழங்களால் உருவான விநாயகர்.

டிக்கெட்

ரயிலில் விநாயகருக்கும் டிக்கெட் போட்டு அழைத்து செல்லும் பக்தர்கள்.

துளசி விதை விநாயகர்

மும்பையில் டவுன் சின்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 56 பெண்கள் ஒரு தன்னார்வல அமைப்பின் சார்பில் விதை விநாயகரை உருவாக்கியுள்ளனர்.

English summary
Different Vinayagar statues are displayed in different places as Vinayagar Chathurthi is being celebrated today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X