டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போலீஸார் மீது வேண்டுமென்றே டிராக்டர் ஏற்றிய விவசாயிகள்.. பரபரப்பு வீடியோ

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய டெல்லியில் ஐடிஓ பகுதியில் போலீஸார் மீது வேண்டுமென்றே டிராக்டரை ஏற்ற முயற்சிக்கும் போராட்டக்காரர்களால் பதற்றம் நீடித்து வருகிறது.

வேளாண் சட்டங்களை முற்றிலும் ரத்து செய்யக் கோரி விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேலாக சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக மத்திய அரசுடன் பல கட்ட பேச்சுவார்த்தையில் சுமூக முடிவுகள் எட்டப்படாததால் குடியரசுதினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த அறிவித்தார்கள்.

Violence continues at ITO in Cental Delhi

அதன்படி இன்று விவசாயிகள் தங்கள் டிராக்டர் பேரணியை தொடங்கினர். குடியரசுத் தினவிழா அன்று முதல்முறையாக இது போன்ற எதிர்ப்பு பேரணி நடைபெறுகிறது. பேரணியாக வந்த விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முயன்றனர்.

அப்போது அதை ஏற்க விவசாயிகள் மறுத்துவிட்டார்கள். மேலும் பல இடங்களில் போலீஸ் வாகனங்களை விவசாயிகள் கைப்பற்றியதால் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. போலீஸ் அதிகாரிகளுடன் விவசாய சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த போது விவசாயிகள் மீது சரமாரியாக தடியடி நடத்தினர்.

குடியரசு தினத்தன்று எந்த பிரச்சினையும் ஏற்படக் கூடாது என்பதற்காக டெல்லியின் 4 எல்லைகளும் மூடப்பட்டன. ஆனால் விவசாயிகளின் இலக்கோ செங்கோட்டைதான். இதனால் டெல்லிக்குள் நுழைய விவசாயிகளும் போலீஸார் வைத்த தடுப்புகளை உடைத்தனர்.

Violence continues at ITO in Cental Delhi

மத்திய டெல்லியில் ஐடிஓ பகுதி வழியாக நுழைந்த விவசாயிகளை போலீஸார் மறித்தனர். அப்போது சில விவசாயிகள் டிராக்டரை அவர்கள் வேண்டுமென்றே தாறுமாறாக ஓட்டி வந்தனர். இதனால் போலீஸார் நாலாப்புறமும் தெறித்து ஓடினர்.

2 மாதங்களாக அமைதியான வகையில் விவசாயிகள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

English summary
Violence continues in Central Delhi as the protestors driving their tractors try to run over police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X