• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்.. துரதிருஷ்டவசமானவை.. முதல்முறையாக மோடி கருத்து

|

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டம் மீதான வன்முறை ஆர்ப்பாட்டங்கள் துரதிர்ஷ்டவசமானவை, மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Violent protests on the Citizenship Amendment Act are unfortunate: Modi

இதுகுறித்து பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டுகளில் கூறியுள்ளதாவது:

குடியுரிமை திருத்தச் சட்டம் மீதான வன்முறை ஆர்ப்பாட்டங்கள் துரதிர்ஷ்டவசமானவை, மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன. விவாதம், கலந்துரையாடல் மற்றும் கருத்து வேறுபாடு ஆகியவை ஜனநாயகத்தின் இன்றியமையாத பகுதிகள், ஆனால், ஒருபோதும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவது, இயல்பு வாழ்க்கையைத் தொந்தரவு செய்வது நமது நெறிமுறைகளுக்கு பொருந்தாது.

குடியுரிமை திருத்தச் சட்டம், 2019, பாராளுமன்றத்தின் இரு அவைகளாலும் பெரும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. ஏராளமான அரசியல் கட்சிகள் மற்றும் எம்.பி.க்கள் ஆதரித்தனர். இந்த சட்டம் ஏற்றுக்கொள்ளல், நல்லிணக்கம், இரக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய இந்தியாவின் பல நூற்றாண்டுகள் பழமையான இயல்பை விளக்குகிறது.

CAA எந்த ஒரு இந்திய குடிமகனையும், மத வேறுபாடின்றி, பாதிக்காது என்பதை எனது சக இந்தியர்களுக்கு சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்த விரும்புகிறேன். இந்த சட்டம் குறித்து எந்த இந்தியருக்கும் கவலைப்பட ஒன்றுமில்லை. இந்தச் சட்டம் பல ஆண்டுகளாக பிற நாடுகளில் துன்புறுத்தல்களை எதிர்கொண்டவர்களுக்கு மட்டுமே. இந்தியாவைத் தவிர வேறு எந்த இடமும் இல்லை என்ற நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே.

இந்தியாவின் வளர்ச்சி மற்றும் ஒவ்வொரு இந்தியரின், குறிப்பாக ஏழைகள், நலிந்தவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் அதிகாரம் ஆகியவற்றிற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே காலத்தின் தேவை. நம்மை பிரித்து தொல்லைகளை உருவாக்க, நினைக்கும் குழுக்களை நாம் அனுமதிக்க முடியாது.

அமைதி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை பேண வேண்டிய நேரம் இது. எந்தவிதமான வதந்திகள் மற்றும் பொய்களிலிருந்தும் விலகி இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும், எனது வேண்டுகோளாகும். இவ்வாறு நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Violent protests on the Citizenship Amendment Act are unfortunate and deeply distressing. Debate, discussion and dissent are essential parts of democracy but, never has damage to public property and disturbance of normal life been a part of our ethos, says PM Narendra Modi.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more