• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தாய்ப்பால் ஊட்டும் வாலிபால் வீராங்கணை.. வைரலாகும் போட்டோ.. சல்யூட் அடித்த அமைச்சர்

|

டெல்லி: தாய்மையை மிஞ்ச வேறு எதுவுமே இல்லை.. தாய்மை பண்புதான், இன்னும் இந்த உலகத்தின் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறது. அப்படியான ஒரு தாய் பற்றிதான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

ஆணுக்கு இங்கேபெண் இளைப்பில்லை காண் என்பார் பாரதி. அவரது தீர்க்க தரிசனம் இப்போது நிஜமாகியுள்ளது. அனைத்து துறைகளிலும் பெண்கள் கோலோச்ச முடிகிறது.

ஆனால் கர்ப்பம், சேய்க்கு பாலூட்டுவது போன்ற, பெண்களால் மட்டுமே முடியக்கூடிய பிரத்யேக பணிகளிலும் அவர்கள் சமரசம் செய்வதில்லை.

தாலி கட்டியாச்சு.. நீதான் என் பொண்டாட்டி.. ஓடும் பஸ்சில்.. ரெடிமேட் தாலியை கட்டி அதிர வைத்த இளைஞர்!

வித்தகி

வித்தகி

இப்படியான பல துறை வித்தகிதான், லால்வென்ட்லுயாங்கி. மிசோராம் மாநிலத்தின் துய்கும், என்ற வாலிபால் அணியை சேர்ந்த வீராங்கணை இவர். இப்போது மிசோராம் மாநில அளவிலான வாலிபால் தொடர் நடந்து வருகிறது. அதில் பங்கேற்க இந்த வீராங்கணையும் சென்றிருந்தார். அபாரமாக ஆடி அணி வெற்றிக்கு உதவுவது ஒரு பக்கம் என்றால், இடைவேளையில் ஓடி வந்து தனது 7 மாத கைக்குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டவும் அவர் மறப்பதில்லை.

சல்யூட்

சல்யூட்

குழந்தைக்கு பசியாற்ற வேறு வழிகள் இருந்தபோதிலும், தாய்ப்பால் புகட்டுவதை தவிர்க்கவில்லை இவர். அதுதான் இந்த நிகழ்வுக்கான முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது. எனவேதான், இந்த புகைப்படம் வைரலாக சுற்றி வருகிறது. மிசோராம் மாநில அமைச்சர் ராபர்ட் ரோமாவியா தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீராங்கணை தனது குழந்தைக்கு தாய்ப்பால்புகட்டும் படத்தை பகிர்ந்தார். அந்த வீராங்கணைக்கு தனது சல்யூட் என்றும் கூறியிருந்தார். இப்போது அந்த போட்டோ வைரலாகி வருகிறது.

தாய்மை தடையில்லை

தாய்மை தடையில்லை

தாய்மை தங்கள் பணிகளுக்கும், குறிக்கோளுக்கும் தடையாக மாறாது என்பதை நிரூபித்தவர்கள் டென்னிஸ் வீராங்கணைகளான செரீனா வில்லியம்ஸ் மற்றும் சானியா மிர்ஸா.

சானியா மிர்ஸா

சானியா மிர்ஸா

செரீனா வில்லியம்ஸில் பெண் குழந்தையை பெற்றெடுத்தபின் தொழில்முறை டென்னிஸில் முதலிடம் பிடித்தார். அதே நேரத்தில் கடுமையான சிக்கல்களை சந்தித்தார் என்பதையும் மறுக்க முடியாதுதான். இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவும் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க தீவிரமாக தயாராகி வருகிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Feeding her 7-month old baby during interval of the volley ball match at inauguration Day of Mizoram State Games ‘19,a Spiker from Tuikum(Serchhip Dist) Ms Lalventluangi expressed happiness over their victory in their first match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more