டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'இந்த வீடியோவை பாருங்க.. பேருந்துக்கு தீவைத்தது யாருன்னு தெரியும்'.. வைரலான வீடியோ.. உண்மை என்ன?

Google Oneindia Tamil News

Recommended Video

    பேருந்துக்கு தீவைத்தது யாருன்னு தெரியும்.. வைரலான வீடியோ.. உண்மை என்ன?

    டெல்லி: டெல்லியில் போலீசார் பேருந்துக்கு தீ வைப்பதற்காக பெட்ரோல் ஊற்றியதாக கூறிய சமூக வலைதளங்களில் பலர் ஒரு வீடியோவை பரப்பினர். இதை திட்டவட்டமாக மறுத்த டெல்லி போலீசார், நாங்கள் தீயை அணைக்க மட்டுமே செய்தோம். வீடியோவை முழுமையாக நன்றாக பாருங்கள் என்று விளக்கம் அளித்துள்ளனர்.

    டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துககு எதிராக போராட்டங்கள் அதிகரித்து வருகிறது. நேற்று முதல் டெல்லி ஜம்மியா பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

    நேற்று போராட்டம் நடந்த தெற்கு டெல்லியில் நடந்த போராட்டத்தில் பேருந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. ஒரே நாளில் டெல்லி போர்க்களமாக மாறியுள்ளது.

    ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாடு முழுக்க மாணவர்கள் ஆதரவு பெருகியது எப்படி? ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாடு முழுக்க மாணவர்கள் ஆதரவு பெருகியது எப்படி?

    வைத்தது யார்

    வைத்தது யார்

    இந்நிலையில் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ ஒன்றில், அடித்து நொறுக்கப்பட்ட டெல்லி அரசு பேருந்து மீது கேனில் இருந்து பேருந்தின் சீட்டை நோக்கி ஏதோ ஒன்றை ஒரு போலீஸ்காரர் ஊற்றுகிறார். இதை குறிப்பிட்டு சிலர் பாருங்கள் போலீஸ்கார்கள் தான் பெட்ரோல் ஊற்றுகிறார்கள். அவர்கள் தான் பேருந்து எரிக்கப்பட காரணம் என்ற ரீதியில் டுவிட்டரில் கருத்துக்களை பரப்ப ஆரம்பித்தனர். இந்த வீடியோ வைரலாக பரவியது.

    யார் தீ வைக்கிறார்கள்

    இந்நிலையில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவும் போலீசார் கலவரத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்து கேள்வி எழுப்பி இருந்தார். அவர் தனது பதிவில். "இந்த புகைப்படத்தைப் பாருங்கள் ... பேருந்துகள் மற்றும் கார்களுக்கு யார் தீ வைக்கிறார்கள் என்று பாருங்கள் ... இந்த புகைப்படம் பாஜகவின் பரிதாப அரசியலுக்கு மிகப்பெரிய சான்று ... இதற்கு பாஜக தலைவர்கள் பதிலளிக்க முடியுமா? "என்று சிசோடியா இந்தியில் ட்வீட் செய்திருக்கிறார்.

    உள்துறை அமைச்சர்

    உள்துறை அமைச்சர்

    டெல்லி காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டில் உள்ளது. பாஜகவின் தலைரான அமித்ஷா உள்துறை அமைச்சராக உள்ளார் டெல்லியில் ஆட்சியில் உள்ள எதிர்க்கட்சி, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியாகும். இந்நிலையில் மணிஷ் சிசோடியாவின் கேள்வி குறித்து டெல்லி போலீசார் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது விளக்கம் அளித்துள்ளனர்.

    முழுமையாக பாருங்க

    முழுமையாக பாருங்க

    டெல்லி போலீஸ் மக்கள் தொடர்பு அலுவலர் எம்.எஸ்.ரந்தாவா கூறுகையில், நீங்கள் முழு வீடியோவையும் பார்க்க வேண்டும். பஸ்ஸுக்கு வெளியே தீ ஏற்பட்டது ... தீயை அணைக்க போலீசார் தண்ணீரைப் பயன்படுத்தினர் "என்று தெரிவித்தார். மற்றொரு படம் குறித்து அவர் கூறுகையில் "நாங்கள் போராட்டக்காரர்களை கலைக்கும்போது, பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து கல் வீசப்பட்டது ... அங்கே காவல்துறையினர், போராட்டக்கார்களை கலைக்க கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தினர்" என்றார்.

    குற்றச்சாட்டுக்கு மறுப்பு

    குற்றச்சாட்டுக்கு மறுப்பு

    டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு எதிராக நடவடிக்கைக்கு எடுத்த போலீஸ் குழுவுக்கு தலைமைதாங்கிய தென்கிழக்கு டெல்லியின் துணை போலீஸ் கமிஷனர் சின்மோய் பிஸ்வால், மணிஷ் சிசோடியாவின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார். உண்மைக்கு முன்னாடி எதுவும் நிற்க முடியாது என்றார்.

    English summary
    Viral Video Of Delhi Clashes: Police Officer said Cops Were Dousing The Fire, police not involved in the vandalism and arson.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X