டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்க உடம்புல வைட்டமின் டி நல்லா ரிச்சா இருக்கா.. அப்ப கொரோனா ஆபத்து குறைவே.. ஆய்வாளர்கள்

உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா சாம்பல் இருக்கா என்று கேட்ட காலம் போய் உங்க உடம்புல வைட்டமின் டி சரியா இருக்கா என்று கேட்கும் காலம் வந்து விட்டது.

Google Oneindia Tamil News

டெல்லி: சூரிய நமஸ்காரம் செய்யுங்க உங்க உடம்பில நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வைட்டமின் டி சத்தும் அதிகரிக்கும். வைட்டமின் டி கொரோனாவிற்கு எதிராக போரிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை நமக்குள் அதிகரிக்கிறது என பல ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சாதாரண மனிதர்களை விட வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களை கொரோனா தாக்குவது அதிகரித்துள்ளதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் என்னும் கண்ணுக்கு தெரியாத கிருமியிடம் உலகம் சிக்கித்தவித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டப்போகிறது. இந்தியாவில் 4 லட்சம் பேர் வரை இந்த நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தினசரியும் கொரோனா தொற்று தாக்கியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த நோய் தாக்கியவர்கள் எல்லோருமே மரணமடைவதில்லை என்றாலும் நோய் பற்றிய அச்சம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. கொரோனாவிற்கு இதுவரை சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் அது பற்றிய ஆய்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

நார்த் வெஸ்ட் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில், கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் உடம்பில் வைட்டமின் டி குறைபாடு இருந்தால் நோயின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 10 நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. வைட்டமின் டி சத்து சரியாக இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை, அவர்கள் எளிதில் குணமடைவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். காரணம் வைட்டமின் டி சத்து உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

சீக்கிரமா பண்ணுங்க.. எதையாவது செய்யுங்க.. டெல்லியால் முடியுதே.. நம்மால் முடியாதா.. ராமதாஸ் கோரிக்கை சீக்கிரமா பண்ணுங்க.. எதையாவது செய்யுங்க.. டெல்லியால் முடியுதே.. நம்மால் முடியாதா.. ராமதாஸ் கோரிக்கை

வைரஸை எதிர்த்து போராடும் வைட்டமின் டி

வைரஸை எதிர்த்து போராடும் வைட்டமின் டி

வைட்டமின் டி நம்முடைய உடம்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. முக்கியமான மினரல்ஸ்களான கால்சியம், பாஸ்பேட், மெக்னீசியம், ஆகியவற்றினை சரியான அளவில் மனித உடம்பில் உற்பத்தி செய்ய உதவுகிறது. நம்முடைய உடம்பில் நோய்களை எதிர்க்கும் சக்தி சரியான அளவில் இருந்தால் மட்டுமே உடம்பிற்குள் புகும் தேவையற்ற வைரஸ்களை எதிர்த்து போராட முடியும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் வைரஸ் தாக்குதல் மூலம் உள் உறுப்புகள் செயல் இழந்து கடைசியில் மரணம் ஏற்படும்.

சத்தான உணவுகள்

சத்தான உணவுகள்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம் எந்த வைரஸ் உடம்பிற்குள் நுழைந்தாலும் எதுவும் செய்யாது. வைட்டமின் டி சத்து சரியாக இருந்தால் போதும் நோய் தாக்குதல் இருந்தாலும் அது குணமாகி விடும். நம்முடைய உடம்பில் உள்ள தோல், கல்லீரல், சிறுநீரகத்தில்தான் வைட்டமின் டி உற்பத்தியாகிறது. தினசரியும் நம்முடைய உடம்பில் வெயில் படும் அளவிற்கு வேலை செய்தாலோ சத்தான உணவுகளை சாப்பிட்டாலோ வைட்டமின் டி சத்து உடம்பில் அதிகரிக்கும். பால், சீஸ், முட்டையின் வெள்ளைக்கரு, மீன், சிக்கன், காளான், நட்ஸ் ஆகியவற்றில் வைட்டமின் டி சத்து உள்ளது.

நோய்க்கு எதிரான போராட்டம்

நோய்க்கு எதிரான போராட்டம்

வைட்டமின் டி சத்தை அதிகரிப்பதற்காக மாத்திரைகளாக விழுங்க வேண்டாம் இதனால் பக்கவிளைவுகள் அதிகரிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். கொரேனா வைரஸ்க்கு எதிரான போர் தற்போது தீவிரமடைந்துள்ளது. உலக நாடுகள் அனைத்துமே கண்ணுக்கு தெரியாத அந்த கிருமியுடன் போராடி வருவதால் ஒவ்வொருவருமே சரியான உணவுகளை சத்தான உணவுகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வது அவசியம்.

பிரண்டை

பிரண்டை

பிரண்டையில் வைட்டமின் டி சத்து உள்ளது. தினசரியும் பிரண்டையை ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக்கொள்ளலாம். நிலத்தடி நீரில் நிறைய சத்துக்கள் இருப்பதால் அதை காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம். மினரல் வாட்டர் என்ற பெயரில் சத்தில்லாத தண்ணீரை உற்பத்தி செய்து குடித்து வருகிறோம். சத்தான நீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்பதும் மருத்துவர்கள் அறிவுரை.

சிறுநீராக கோளாறு

சிறுநீராக கோளாறு

சிறுநீரக கோளாறு, கல்லீரல் கோளாறு, நீரிழிவு நோயாளிகளை தாக்கும் கொரோனா வைரஸ் எளிதில் உயிரைக் குடிக்கிறது. எனவேதான் சிறுநீரகம், கல்லீரல் நோய் பாதிப்பு உள்ளவர்கள் வைட்டமின் டி சத்து உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். தினசரியும் நமது உடம்பில் காலையிலும் மாலையிலும் சூரிய ஒளி படும் வகையில் நடைபயிற்சி செய்தாலே போதும் வைட்டமின் டி அதிகரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

English summary
One vitamin D study demonstrates an association exists between low levels of vitamin D and higher numbers of Covid-19 cases and mortality.Vitamin D is made by the skin on exposure to sunlight and is essential for bone growth and strength as it helps in the intestinal absorption of calcium, magnesium, and phosphate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X