டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ம.பி.யின் 28 தொகுதிகள் உட்பட 10 மாநிலங்களில் 54 தொகுதிகளில் இடைத்தேர்தல்கள்- வாக்குப் பதிவு தொடக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய பிரதேசத்தின் 28 தொகுதிகள் உட்பட 10 மாநிலங்களில் 54 சட்டசபை தொகுதி இடைத் தேர்தல்களில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

பீகார் சட்டசபை தேர்தலில் 2-ம் கட்டமாக 94 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. அதேபோல் 10 மாநிலங்களில் 54 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களிலும் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Voting for by-elections to 54 seats in 10 states today

நாடு முழுவதும் மொத்தம் 63 சட்டசபை தொகுதி இடங்கள் காலியாக உள்ளன. இதில் 54 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகள்; குஜராத்தில் 8; உத்தரப்பிரதேசத்தில் 7; ஒடிஷா, நாகாலாந்து, கர்நாடகா, ஜார்க்கண்ட்டில் தலா 2 தொகுதிகள்; சத்தீஸ்கர், தெலுங்கானா, ஹரியானாவில் தலா 1 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

மத்திய பிரதேசத்தில் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவினர். இதனால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் பாஜகவில் ஐக்கியமாகினர். மேலும் 3 எம்.எல்.ஏக்கள் காலமாகினர். இதனால் ம.பி.யில் மொத்தம் 28 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

வாக்குப் பதிவு நடைபெற்று வரும் தொகுதிகளில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

English summary
Along with the second phase of polling in the Bihar assembly elections, voting for 54 other assembly seats in 10 states will also take place today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X