டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜனாதிபதி, பிரதமருக்கு...ரூ. 8,400 கோடி மதிப்பில் 2 விவிஐபி விமானங்கள்...டெல்லி வந்தன!!

Google Oneindia Tamil News

டெல்லி: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் பயன்படுத்துவதற்கான ஏர் இந்தியா ஒன் B777 சிறப்பு விமானம் அமெரிக்காவில் இருந்து இன்று டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த இரண்டு விமானங்களின் விலை ரூ. . 8,400 கோடி என்று தெரிய வந்துள்ளது.

போயிங் தயாரித்து இருக்கும் இந்த விமானங்களை கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவுக்கு வழங்கி இருக்க வேண்டும். கொரோனா காரணமாக தள்ளிப் போனது. இதையடுத்து ஆகஸ்டிலும் தள்ளிப்போனது. இதற்கு தொழில்நுட்பம் காரணங்களாக கூறப்பட்டது.

போற போக்கை பார்த்தா மோடியுடன் வீடியோ கான்பரன்ஸில் பேசவே இல்லைன்னு சொல்லுவாரோ மகிந்த ராஜபக்சே? போற போக்கை பார்த்தா மோடியுடன் வீடியோ கான்பரன்ஸில் பேசவே இல்லைன்னு சொல்லுவாரோ மகிந்த ராஜபக்சே?

ஒன் மோர்

ஒன் மோர்

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் இருந்து இன்று டெல்லியில் தரையிறங்கின. மேலும் ஒரு விமானம் போயிங் நிறுவனத்திடம் இருந்து நடப்பாண்டு இறுதியில் வாங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு வசதி

சிறப்பு வசதி

தற்போது டெல்லி வந்து இறங்கி இருக்கும் இந்த இரண்டு சிறப்பு விமானங்களும் கடந்த 2018ஆம் ஆண்டில் வர்த்தக ரீதியாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இதன் பின்னர் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டு விவிஐபிக்கள் பயன்படுத்தும் வகையில், இதில் கூடுதல் சிறப்பு கருவிகள், வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த இரண்டு விமானங்களின் விலை மற்றும் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்ட வகையில் இவற்றின் மொத்த விலை ரூ. 8,400 கோடி என்பது தெரிய வந்துள்ளது.

ஏவுகணை

ஏவுகணை

இந்த விமானங்களில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏவுகணை எதிர்ப்பு திறன் கொண்ட பாதுகாப்பு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விமானங்களை ஏர் இந்தியா விமான ஓட்டிகள் இயக்க மாட்டார்கள். இந்திய விமானப் படையைச் சேர்ந்தவர்கள்தான் இயக்குவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பி 777

தற்போது ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் செல்லும் பி 747 என்ற இந்த விமானங்கள் ஏர் இந்தியா ஒன் என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த புதிய விமானங்கள் பி 777 என்று அழைக்கப்படுகிறது. அதாவது சிறப்பு பிரதிநிதிகளுக்கு என்று உருவாக்கப்பட்டது. ஏற்கனவே ஏர் இந்தியா ரூ. 60,000 கோடி கடனில் இருக்கிறது. இதனால் இவற்றின் பங்குகளை விற்பதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
VVIP aircraft Air India One arrives at Delhi International Airport from US
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X