டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அட என்ன இவங்களுக்குள்ள சண்டையா? ஓவைசியை மோசமாக தாக்கும் மமதா.. கடும் வார்த்தை போர்!

மஜ்லிஸ் கட்சி தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான ஓவைசியை மத ரீதியான தீவிரவாத கருத்துக்களை விதைக்கிறார் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: மஜ்லிஸ் கட்சி தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான ஓவைசியை மத ரீதியான தீவிரவாத கருத்துக்களை விதைக்கிறார் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். அவரின் விமர்சனத்திற்கு ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியாவில் இருக்கும் இரண்டு முக்கியமான எதிர்க்கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்களுக்கு இடையில் தற்போது தேவையில்லாத சண்டை உருவாகி உள்ளது. 2021ல் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்காக தீவிரமாக தயாராகி மேற்கு வங்கத்தில் திரிணாமுல் முதல்வர் மமதா பானர்ஜி தீவிரமாக தயாராகி வருகிறார்.

இதற்காக அவர் கொஞ்சம் மிதவாத இந்துத்துவாவை கடைபிடிக்க தொடங்கிவிட்டார் என்றும் கூறுகிறார்கள். அடிக்கடி இப்போதெல்லாம் கோவில் விசிட்களை இவர் நிகழ்த்தி வருகிறார்.

காத்திருக்கட்டும்.. சிவசேனாவை வேண்டுமென்றே அலைய விடும் சோனியா.. சரத் பவாரிடம் சொன்னது இதுதான்!காத்திருக்கட்டும்.. சிவசேனாவை வேண்டுமென்றே அலைய விடும் சோனியா.. சரத் பவாரிடம் சொன்னது இதுதான்!

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இந்த நிலையில்தான் மஜ்லிஸ் கட்சி தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான ஓவைசி குறித்து மமதா கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி இந்தியாவில் சிலர் மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். மைனாரிட்டியை சேர்ந்தவர்கள் கூட தீவிரவாத கருத்துக்களை விதைக்கிறார்கள்.

ஹைதராபாத் எம்பி

ஹைதராபாத் எம்பி

ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவர் மைனாரிட்டி மக்கள் இடையே மத ரீதியான தீவிரவாதத்தை விதைக்கிறார். இதை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவர்களை போன்றவர்கள் அரசியல் சந்தர்ப்பவாதிகள் என்று மமதா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

சொல்லவில்லை

சொல்லவில்லை

மமதா பானர்ஜி நேரடியாக ஓவைசிவை குறிப்பிடவில்லை. மாறாக ஹைதராபாத் அரசியல்வாதி என்று கூறியுள்ளார். மஜ்லிஸ் கட்சி தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான ஓவைசி ஹைதராபாத்தில்தான் அரசியல் செய்து வருகிறார். இவர் மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தில் கால் பதிக்க முயன்று வருகிறார்.

மேற்கு வங்கம்

மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் ஓவைசி கட்சி உறுப்பினர்கள் மமதாவை எதிர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதனால்தான் தற்போது ஓவைசியை மமதா எதிர்க்கிறார். அதேபோல் இந்துக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்று ஓவைசியை மமதா எதிர்க்கிறார் என்று கூறுகிறார்கள்.

என்ன பதிலடி

மமதாவின் கருத்திற்கு ஓவைசி தற்போது பதில் அளித்துள்ளார். அதில், இதற்கு பெயர் மத தீவிரவாதம் கிடையாது. வங்கத்தில் தான் இஸ்லாமியர்களின் வாழ்க்கை தரம் மிக மோசமாக இருக்கிறது. மமதா ஹைதராபாத்தில் இருந்து வரும் எங்களை பற்றி கவலைப்படுவது இருக்கட்டும். அவரின் மாநிலத்தில் பாஜக 42 இடங்களில் 18 லோக்சபா இடங்களை எப்படி வென்றது என்று முதலில் கூறட்டும் என்று கேட்டுள்ளார்.

English summary
War of words erupts between Owaisi and Mamata Banerjee, after later's minority extremist remark.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X