டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னே அழகு! செவ்வாய்க் கிரகத்தில் 82 கி.மீ. அகலம் கொண்ட பனிப்பள்ளம்.. ஸ்டன்னிங் வீடியோ வெளியீடு!

Google Oneindia Tamil News

டெல்லி: சிகப்பு கிரகம் எனப்படும் செவ்வாய்க் கிரகத்தில் 82 கி.மீ. அகலம் கொண்ட பனிப்பள்ளம் குறித்து ஸ்டன்னிங் வீடியோவை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது.

இயற்கை என்றுமே அழகுதான். அதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து புதியதை கண்டுபிடிக்கிறார்கள். கிரகங்கள், சூரியன், நிலவு, நட்சத்திர கூட்டம், விண்மீன்கள், விண்கற்கள் என அனைத்து குறித்தும் ஆய்வு செய்கிறார்கள்.

இயற்கை எப்போதும் கொள்ளை அழகு. ஆம் இந்த செய்தியில் உள்ள இடத்தை பார்க்கும் போது இந்த கொரோனா லாக்டவுன் முடிந்தவுடன் அடுத்த ஆண்டு போகலாம்னு ஆசையா இருக்கா?

செவ்வாய்க் கிரகம்

செவ்வாய்க் கிரகம்

அது முடியாதே! ஏனென்றால் அந்த இடம் செவ்வாய்க் கிரகத்தில் உள்ளது. செவ்வாயில் வடக்கு பகுதியில் உள்ள கோரோலேவ் கிரேட்டர் ஆகும். இது தாழ்வான பகுதியாகும். இந்த இடம் முற்றிலும் பனியால் நிரம்பியுள்ளது. அதன் மையத்தில் ஆண்டு முழுவதும் 1.8 கி.மீ. அடர்த்தி கொண்ட ஒருவகை மணல் அந்த நீர் பனியை ஏற்படுத்தியுள்ளது.

பனி

பனி

இந்தப் பகுதியில் ஆண்டு முழுவதும் நிரந்தரமாக பனி நீர் இருக்க காரணம் அதன் தாழ்வான நிலையே ஆகும். இதன் தாழ்வான ஆழமான பகுதி இயற்கையாகவே குளிர் பொறியாக செயல்படுகிறது. பனிக்கு மேலே உள்ள காற்று குளிர்ந்து சுற்றியுள்ள காற்றோடு ஒப்பிடும் போது கனமாக இருக்கிறது. காற்று வெப்பத்தை கடத்தாது.

ஸ்டீரியோ

ஸ்டீரியோ

இந்த நீர் பனியானது வெப்பம் மற்றும் பதங்கமாதல் ஆகியவற்றில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. டிசம்பர் 2018-ஆம் ஆண்டு முதன்முதலில் வெளியிடப்பட்ட மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஹை ரெசொல்யூஷன் ஸ்டீரியோ கேமரா (எச்.ஆர்.எஸ்.சி) கைப்பற்றிய படங்களையும் எச் ஆர் எஸ் சி நாடிர் மற்றும் வண்ண சேனல்களின் தரவையும் பயன்படுத்தி பிரமிக்க வைக்கும் கோரோலேவ் கிரேட்டர் பள்ளத்தின் வீடியோ உருவாக்கப்பட்டது என ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கூறியுள்ளது.

விஞ்ஞானிகள்

விஞ்ஞானிகள்

எச்ஆர்எஸ்சியின் ஸ்டீரியோ சேனல்களுடன் இணைந்து முப்பரிமான நிலப்பரப்பை உருவாக்கியது. பின்னர் அதை ஒரு வீடியோ கேமராவை போல வெவ்வேறு கோணங்களில் பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோ ஜூலை 2ஆம் தேதி வெளியிடப்பட்டது. செவ்வாய்க்கிரகத்தில் நீருக்கான ஆதாரத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் ஆவலாக இருக்கிறார்கள்.

English summary
Watch the Video of European Space Agency's shows icy crater on the Red planet Mars.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X