டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொல்ல வந்த நாகப்பாம்பு.. நொடிப்பொழுதில் பறந்து தப்பிய கீரி.. சர்வைவல் வீடியோ

Google Oneindia Tamil News

Recommended Video

    கோப்ராவின் பிடியில் இருந்து தப்பிக்கும் கீரிப்பிள்ளை - வைரல் வீடியோ

    டெல்லி: நாகப்பாம்பிடம் இருந்து கீரி ஒரு நொடியில் மின்னல் வேகத்தில் தப்பிச்செல்லும் சிலிர்க்க வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    விஷமுள்ள பாம்புகளை, குறிப்பாக நாக பாம்புகளை கொல்லும் திறன் மிகுந்தவை என்றால் அது கீரிப்பிள்ளைகள் தான். ஒரு இனத்திற்கு இன்னொரு இனம் உணவு என்ற அடிப்படையில் பாம்பும் கீரியும் எப்போது எதிரிகள் என்றே அழைக்கப்படுகின்றன.

    பொதுவாக நாம் ஒருவர் அடிக்கடி சண்டை போட்டால் ஏன் பாம்பு கீரி போல சண்டை போடுறீங்க என்ற கேட்போம் அந்த அளவுக்கு இரண்டுக்கும் இடையே கடும் பகை இருக்கும். அதாவது இரண்டும் இனப்பகையாகவே இருக்கிறது.

    மேளதாளத்துடன் ஸ்டாலினுக்கு ஸ்பெஷல் வரவேற்பு கொடுத்த சிவசேனா.. விழாவிற்காக புத்தம் புதிய லுக்!மேளதாளத்துடன் ஸ்டாலினுக்கு ஸ்பெஷல் வரவேற்பு கொடுத்த சிவசேனா.. விழாவிற்காக புத்தம் புதிய லுக்!

    கிரியின் செயல்பாடு

    கிரியின் செயல்பாடு

    பாம்பு கீரியை கண்டால் பயந்து ஓடும். அதேநேரம் சண்டை என்று வந்தால் சும்மா போகாது. தன்னால் முடிந்தவரை சண்டை போடும். இதில் பெரும்பாலும் கீரிதான் வெல்லும். இதற்கு காரணம் பாம்பின் விஷத்தை கிரகித்துக் கொள்ளுதல் மற்றும் கீரியின் மின்னல் வேக தாக்குதல் முறை போன்றவற்றைக் காரணமாக சொல்லலாம்.

    எப்படி தப்பிக்கிறது

    எப்படி தப்பிக்கிறது

    இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா பகிர்ந்துள்ள வீடியோவில் ஒரு குட்டி கீரிப்பிள்ளை எப்படி பாம்பை எதிர்த்து போராடுகிறது என்பதும் அது எவ்வாறு தப்பிக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

    தாவிய கீரி

    தாவிய கீரி

    அதாவது நந்தா பகிர்ந்த அந்த வீடியோவில் ஒரு வினாடியில் நாகப்பாம்பு தலையை தூக்கி கீரியை கொத்த வருகிறது. அதை அறைநொடியில் கண்டு சுதாரிக்கும் கீரிப்பிள்ளை மின்னல் வேகத்தில் தாவி பாம்பின் தாக்குதலில் இருந்து தப்பிக்கிறது.

    சமூக வலைதளத்தில்

    இந்த வீடியோ உயிர் வாழ்வதற்கு விலங்குகள் எப்படி ஒரு நொடியையும் வீணாக்காமல் மின்னல் வேகத்தில் செயல்படுகின்றன என்பதை காட்டும் வகையில் அதாவது 'சர்வைவல்' பாணியில் இருப்பதால் பலரும் வேகமாக சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். இதனால் பாம்பிடம் இருந்து கீரி தப்பிச்செல்லும் வீடியோ சமூக வலைதளம் முழுவதும் நிறைந்து காணப்படுகிறது.

    English summary
    How This Mongoose Escapes Deadly Cobra Strike, mongoose jumping into the air as the cobra strikes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X