டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மே.வங்கம், தமிழகத்தில் காவி கொடியா? மத்திய அமைச்சர் பதவியா? அமித்ஷா தேர்வு எது?

Google Oneindia Tamil News

Recommended Video

    மே.வங்கம், தமிழகத்தில் காவி கொடியா?.. மத்திய அமைச்சர் பதவியா?- வீடியோ

    டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இடம்பெறுவாரா? அல்லது மேற்கு வங்கம், தமிழகம் சட்டசபை தேர்தல்களுக்குப் பின்னர் இணைவரா? என்பது குறித்து அக்கட்சியில் தீவிர விவாதம் நடைபெற்று வருகிறது.

    லோக்சபா தேர்தல் முடிந்த கையோடு அடுத்தடுத்து மாநில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. 2021-ல் நடைபெற உள்ள மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட சட்டசபை தேர்தல்கள் பாஜகவுக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    மே.வங்கத்தில் 7 கட்டமாக திரிணாமுல் எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவும் நிகழ்ச்சி- பாஜக ஏற்பாடு!மே.வங்கத்தில் 7 கட்டமாக திரிணாமுல் எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவும் நிகழ்ச்சி- பாஜக ஏற்பாடு!

    திரிணாமுலுக்கு காவி

    திரிணாமுலுக்கு காவி

    இதில் மேற்கு வங்கத்தில் எப்படியும் பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என்பதற்கான சமிக்ஞையாகவே லோக்சபா தேர்தல் முடிவுகளும் அதற்கு பிந்தைய கட்சி தாவல் நடவடிக்கைகளும் வெளிப்படுகின்றன. திரிணாமுல் காங்கிரஸை அப்படியே கபளீகரம் செய்து வெல்வது என்பது பாஜகவின் வியூகம்.

    மே. வங்கத்துக்கு குறி

    மே. வங்கத்துக்கு குறி

    ஏற்கனவே அம்மாநிலத்தில் இடதுசாரிகள் பாஜகவின் வாக்கு வங்கியாகவே மாறிப் போனதால் அக்கட்சிக்கு இந்த வியூகம் மிக எளிதானது. ஆகையால் அமித்ஷாவின் முழு கவனமும் தற்போது மேற்கு வங்கத்தில் இருக்கிறது.

    ரஜினிகாந்தை முன்வைத்து வியூகம்

    ரஜினிகாந்தை முன்வைத்து வியூகம்

    இதனைத் தொடர்ந்து காலூன்றவே முடியாத தமிழகத்தில் எப்படியும் ஆட்டம் காட்டுவது என்பதுதான் அமித்ஷாவின் இலக்கு. இதற்காகவே ரஜினிகாந்தை களமிறக்கி அவரது கட்சியுடன் கூட்டணி அமைப்பது அல்லது அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு ரஜினிகாந்தை கொண்டு செல்வது போன்ற வியூகங்களுடன் வலம் வருகிறது பாஜக.

    உள்துறை அமைச்சர் அமித்ஷா?

    உள்துறை அமைச்சர் அமித்ஷா?

    இதனால் 2021 சட்டசபை தேர்தல்களுக்குப் பின்னர் அமைச்சரவையில் வலிமையாக அமித்ஷா அமரக் கூடும் என்கின்றன பாஜக வட்டாரங்கள். அதேநேரத்தில் மோடி அமைச்சரவையில் உள்துறை அமைச்சர் பதவியுடன் நம்பர் 2வாக அமித்ஷா இருக்க வேண்டும் எனவும் பாஜகவில் ஒரு தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

    அமித்ஷாவின் தேர்வு என்னவோ?

    English summary
    BJP Sources said that Amit Shah may join in Modi Govt after the West Bengal and Tamilnadu Assembly Elections in 2021.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X