டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தீவிரமாக கவனித்து வருகிறோம்.. ஹாங்காங் மூலம் சீனாவை நெருக்கும் இந்தியா.. ஐநாவில் அதிரடி பேச்சு!

Google Oneindia Tamil News

டெல்லி: ஹாங்காங்கில் நிறைவேற்றப்பட்டு இருக்கும் பாதுகாப்பு சட்டத்திற்கு இந்தியா கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. ஐநாவில் இன்று நடந்த விவாதத்தில் இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

Recommended Video

    India China பிரச்சினையில் மாட்டிக்கொண்டு விழிக்கும் Hong Kong | India's Message At UN

    சீனாவில் சுதந்திரமான தனி பிராந்தியமாக இருக்கும் ஹாங்காங் இருந்து வருகிறது. சீனாவில் சிறப்பு அந்தஸ்து மற்றும் உரிமை கொண்ட மாகாணமாக ஹாங்காங் இருக்கிறது. ஆனால் இதன் சிறப்பு அந்தஸ்த்தை நீக்க சீனா முயன்று வருகிறது. அதன் ஒரு கட்டமாக அங்கு சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை சீனா கொண்டு வந்துள்ளது.

    இந்த சட்டம் ஹாங்காங்கின் சுதந்திரத்தை மொத்தமாக பாதிக்கும் என்றும் கூறுகிறார்கள். அந்த மாகாணத்தின் தன்னாட்சி அதிகாரத்தை பறிக்கும் வகையில் சீனா இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

    முக்கிய முன்னேற்றம்.. லடாக் பேச்சுவார்த்தையில் இறங்கி வரும் சீனா.. எல்லையில் நடக்கும் சின்ன மாற்றம்!முக்கிய முன்னேற்றம்.. லடாக் பேச்சுவார்த்தையில் இறங்கி வரும் சீனா.. எல்லையில் நடக்கும் சின்ன மாற்றம்!

    என்ன அதிகாரம்

    என்ன அதிகாரம்

    இதன் மூலம் ஹாங்காங் உள்ளே சீனா எப்போது வேண்டுமானாலும் தங்கள் படைகளை அனுப்ப முடியும். பாதுகாப்பை காரணம் காட்டி சீனா படைகளை அனுப்ப முடியும். இது ஹாங்காங்கின் சுயாட்சியை மொத்தமாக பறிக்கும் செயல் என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது. உலக நாடுகள் பல இந்த சட்டத்தை எதிர்த்து வருகிறது. தற்போது இந்தியாவும் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இன்று இந்தியா

    இன்று இந்தியா

    ஹாங்காங்கில் நிறைவேற்றப்பட்டு இருக்கும் பாதுகாப்பு சட்டத்திற்கு இந்தியா கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. ஐநாவில் இன்று நடந்த விவாதத்தில் இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்தியா சார்பாக ஐநாவில் பேசிய இந்திய தூதர் ராஜிவ் கே சந்தர், ஐநா சபை ஹாங்காங் பிரச்சனை மீது கவனம் செலுத்த வேண்டும். ஹாங்காங்கில் நடக்கும் விஷயங்களை ஐநா கூர்ந்து கவனிக்க வேண்டும். ஹாங்காங்கில் அதிக எண்ணிக்கையில் இந்திய மக்கள் வசித்து வருகிறார்கள்.

    சுதந்திரம் போகும்

    சுதந்திரம் போகும்

    இதனால் அங்கிருக்கும் மக்களின் சுதந்திரம் பறிபோகும். அங்கு பொருளாதாரத் ரீதியாகவும், கருத்துரிமை ரீதியாகவும் மக்களின் சுதந்திரம் மொத்தமாக பறிக்கப்படும். அங்கு அதிக அளவில் இருக்கும் இந்தியர்கள் காரணமாக, எங்களின் கவனம் முழுக்க ஹாங்காங் பக்கம் திரும்பி உள்ளது. இந்தியா இதை தீவிரமாக கவனித்து வருகிறது. இது தொடர்பாக உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்க தொடங்கி உள்ளது.

    கவனம் அவசியம்

    கவனம் அவசியம்

    இதை உலக நாடுகளும், ஐநாவும் கவனிக்க வேண்டும். அதை முறையாக கையாள வேண்டும், என்று இந்தியா சார்பாக பேசிய ராஜிவ் கே சந்தர் கூறியுள்ளார். லடாக் எல்லையில் இந்திய சீனா இடையே ஏற்கனவே கடுமையாக பிரச்சனை நிலவி வருகிறது. இன்னொரு பக்கம் நேபாளத்தை வைத்து இந்தியாவை சீனா நெருங்கி வருகிறது. இந்த நிலையில் ஹாங்காங்கை வைத்து சீனாவை இந்தியா நெருக்க தொடங்கி உள்ளது. ஹாங்காங் விஷயத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா ஆகிய நாடுகளும் இந்தியாவின் நிலைப்பாட்டையே எடுத்துள்ளது.

    English summary
    We are focusing on Hong Kong says India in UN against China.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X