டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்திய - சீன மோதல்.. மத்தியசம் பேச முயன்ற டிரம்ப்.. இந்திய வெளியுறவுத்துறை கொடுத்த அதிரடி பதில்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா மற்றும் சீனாவின் எல்லை பிரச்னையை சரி செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது தொடர்பாக தற்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. நேரடியாக டிரம்பிற்கு பதில் அளிக்காமல் மறைமுகமாக டிரம்பிற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல் எப்போது வேண்டுமானாலும் போராக வெடிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். முக்கியமாக லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது. அங்கு தொடர்ந்து படைகள் குவிக்கப்பட்டு வருகிரியாது .

அங்கு விமானப்படைகள், போர் விமானங்கள் கூட தற்போது குவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. லடாக்கில் இருக்கும் பாங்காங் டிசோ பகுதியில் உள்ள நதியில் தொடர்ந்து சீனா அத்து மீறி வருகிறது.

தொடர் பொய்கள்.. இந்தியாவிற்கு எதிராக தொடர் பொய்கள்.. இந்தியாவிற்கு எதிராக "அதே ஸ்டைல்" பிளான்.. எல்லையில் சீனாவின் புது பித்தலாட்டம்!

டிரம்ப் கருத்து

டிரம்ப் கருத்து

இந்த நிலையில் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் நடக்கும் பிரச்னையை தீர்த்து வைப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, எல்லையில் தற்போது நடந்து வரும் பிரச்னையை சரி செய்ய தயாராக இருக்கிறோம். இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டால் அவர்களிடையே பேசி, சமாதானம் செய்து, மத்தியசம் பேச தயாராக இருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

என்ன பேட்டி

என்ன பேட்டி

இந்த நிலையில் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா இது தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். அதில், இந்தியா சீனா இடையிலான பிரச்சனையை அமைதியாக தீர்க்க முயன்று கொண்டு இருக்கிறோம். ராஜாங்க ரீதியான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். இரண்டு நாடுகளும் ராஜாங்க ரீதியான நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகிறது.

பேச்சுவார்த்தை தீர்வு

பேச்சுவார்த்தை தீர்வு

பேச்சுவார்த்தை மூலம் இதை தீர்க்க முயன்று வருகிறோம். இன்னொரு பக்கம் ராணுவ ரீதியான தீர்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே பல ஒப்பந்தங்களை செய்து இருக்கிறோம். அமைதியயை, எல்லையில் சிரத்தன்மையை கொண்டு வருவது தொடர்பாக ஒப்பந்தங்களை செய்து இருக்கிறோம். இதை குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்துவோம்.

பொறுப்புணர்வு

பொறுப்புணர்வு

நாங்கள் எல்லையில் விதிகளை பின்பற்றி செயல்பட்டு வருகிறோம். எல்லையில் மிக கவனமாக செயல்பட்டு வருகிறோம். அதேபோல் அங்கு பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறோம். பிரதமர் மோடி கொடுக்கும் உத்தரவுகளை பின்பற்றி வருகிறோம் . இந்திய எல்லை மற்றும் ஒற்றுமையை காக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்கிறோம், என்று அனுராக் ஸ்ரீவஸ்தவா குறிப்பிட்டுள்ளார்.

இதுதான் பதில்

இதுதான் பதில்

அனுராக் ஸ்ரீவஸ்தவாதாவின் இந்த பேட்டி, அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு பதிலாக பார்க்கப்படுகிறது. அதாவது இந்தியா, சீனா பிரச்சனையை நாங்களே பேச்சுவார்த்தை மூலம் சரி செய்கிறோம். நீங்கள் தலையிட வேண்டாம், இது இரண்டு நாட்டு பிரச்சனை என்று அதிபர் டிரம்பிற்கு இந்தியா சொல்லாமல் சொல்லி இருக்கிறது. இதற்கு முன்பே இதேபோல் பாகிஸ்தான் பிரச்சனையில் அதிபர் டிரம்ப் தலையிட இந்தியா அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
We are in talks with Beijing, India firmly rebuffed the US President Trump's meditation .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X