டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுயேச்சைகள்.. எதிரிகளின் ஆதரவையும் ஏற்றுக்கொள்வோம்.. மோடி யூ-டர்ன்.. தொங்கு லோக்சபா உருவாகிறதா?

லோக்சபா தேர்தலுக்கு பின் சிறிய சிறிய கட்சிகளை, எதிரிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள கூட பாஜக தயாராக இருக்கிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு இருக்கிறார்.

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு பின் சிறிய சிறிய கட்சிகளை, எதிரிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள கூட பாஜக தயாராக இருக்கிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு இருக்கிறார்.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு சிஎன்என் ஐபிஎன் செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பேட்டியளித்து இருக்கிறார். பிரதமர் மோடி தனது பேட்டியில் தேர்தலுக்கு பின் நடக்க உள்ள கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்து குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியின் இந்த பேட்டி பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இந்த முறை தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் என்பதால்தான் மோடி இப்படி குறிப்பிடுகிறாரோ என்று கேள்வி எழுந்துள்ளது.

பொய்யான பிரச்சாரங்களா... வெறுப்புணர்வை தூண்டும் பதிவா... பேஸ்புக் கண்காணிக்கிறதுபொய்யான பிரச்சாரங்களா... வெறுப்புணர்வை தூண்டும் பதிவா... பேஸ்புக் கண்காணிக்கிறது

என்ன பேட்டி

என்ன பேட்டி

பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டியில், பாஜக கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது. இந்த கூட்டணிதான் மீண்டும் லோக்சபா தேர்தலில் வெற்றி அடையும். மெஜாரிட்டியை விட அதிக இடங்களை பெற்று நாங்கள் ஆட்சியை பிடிப்போம். அதற்கு ஏற்ற சூழ்நிலைதான் தற்போது உள்ளது.

கண்டிப்பாக உதவி

கண்டிப்பாக உதவி

எங்களுக்கு யாருடைய ஆதரவும் தேவை கிடையாது. எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் நிலைதான் தற்போது இருக்கிறது. மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் கூட எங்களுக்கு ஆட்சி அமைக்க சில கட்சிகள் உதவும்.

யாரிடம் கேட்போம்

யாரிடம் கேட்போம்

தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்காக நாங்கள் சிறிய சிறிய ஒரு எம்பிகளை கொண்ட கட்சிகளுடன், சுயேட்சைகளுடன் கூட்டணி வைக்கவும் தயாராக இருக்கிறோம். எங்கள் எதிரிகளுடன் கூட்டணி வைக்கவும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அதனால் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம்.

என்ன ஆசை

என்ன ஆசை

எங்களுக்கு ஆட்சி அமைக்க வேண்டும் என்பது ஆசை இல்லை. எங்களுக்கு இந்த நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதனால் யாருடன் கூட்டணி வைக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாடுதான் முக்கியம், என்று பிரதமர் மோடி தனது பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.

என்ன கேள்விகள்

என்ன கேள்விகள்

பிரதமர் மோடியின் இந்த பேட்டி பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. அவர் ஏன் இப்படி பேட்டி அளித்தார், எதனால் எதிரிக்கட்சிகளுடன் கூட்டணி வைக்க தயாரானார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

1. இந்த முறை தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் என்பதால்தான் மோடி இப்படி குறிப்பிடுகிறாரா?

2. தேர்தலுக்கு பின் கூட்டணி அமைக்க இப்போதே அழைக்கிறாரா?

3. காங்கிரஸ் கூட்டணியை உடைக்கும் திட்டமா?

4. வேறு ஏதாவது தேர்தல் தந்திரமா என்று இந்த பேட்டி பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

English summary
We are even ready to join hands with political adversaries says PM Modi on Post poll alliances.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X