டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொருளாதாரம் புத்துயிர் பெறும் அறிகுறி தெரிகிறது.. நம்பிக்கையாக சொல்கிறார் நிர்மலா சீதாராமன்

Google Oneindia Tamil News

Recommended Video

    பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது- நிர்மலா சீதாராமன் -வீடியோ

    டெல்லி: தொழில்துறை புத்துயிர் பெறுவதற்கான தெளிவான அறிகுறியை நாங்கள் காண்கிறோம் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    டெல்லியில் இன்று நிருபர்களிடம் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ஃபிக்ஸ்ட் முதலீட்டு வீதத்தின் மறுமலர்ச்சியும் தெரிகிறது. பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கான நிலையான அறிகுறிகள் தென்படுகின்றன.

    We are seeing a clear sign that the industrial sector is revitalizing: Nirmala Sitharaman

    2018-19 மற்றும் 19-20ம் நிதியாண்டுகளுக்கு இடையில், அன்னிய நேரடி முதலீட்டில் புத்துயிர் பெறுவதற்கான தெளிவான அறிகுறி உள்ளது. சாதாரண குற்றங்களுக்காக, வரி செலுத்துவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படாது. 25 லட்சம் கீழ் உள்ள நிதி முறைகேடுக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடர வேண்டுமானால், கொலிஜீயம் அனுமதி வழங்க வேண்டும்.

    வங்கிகளின் கடன் அளிப்பு விகிதம், அதிகரித்துள்ளது. செப்டம்பர் 19ம் தேதி கடன் வழங்குதல் முறை குறித்து அனைத்து பொதுத்துறை வங்கிகளின் (பி.எஸ்.பி) தலைவர்களையும் சந்தித்து ஆலோசிக்க உள்ளேன்.

    2020, ஜனவரி 1ம் தேதி முதல், ஏற்றுமதிகள் மீதான வரியை குறைக்க உள்ளோம். ஏற்றுமதி தயாரிப்புகளுக்கான வரிகுறைப்பு, அல்லது வரிகளை நீக்குதல் திட்டம் (RoDTEP) ஒரு புதிய திட்டமாகும். இந்த அனைத்து வணிக ஏற்றுமதியையும் முழுமையாக மாற்றும்.

    சிறிய அளவில் வரி ஏய்ப்போர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது - நிர்மலா சீதாராமன்சிறிய அளவில் வரி ஏய்ப்போர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது - நிர்மலா சீதாராமன்

    ஏற்றுமதிக்கு மூலதனத்தை வழங்கும் வங்கிகளுக்கு அதிக காப்பீட்டுத் தொகையை அரசு வழங்கும். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ .1700 கோடி கூடுதலாக செலவாகும். இந்தியா ஆண்டுதோறும் மெகா ஷாப்பிங் விழாக்களை நடத்தும். மார்ச் 2020க்குள் முதலாவது மெகா ஷாப்பிங் திருவிழா நடக்கும். இதனால் கைவினைப் பொருட்கள், சிறு, குறு பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    English summary
    Govt working to reduce 'Time to export' by leveraging technology further, Action Plan to reduce turn around time at airports and ports bench marked to international standards to be implemented by Dec 2019 says Finance Minister Nirmala Sitharaman.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X