டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாங்கள் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்களா? யார் சொன்னது? ஆர்எஸ்எஸ் இயக்கம் அதிரடி மறுப்பு!

Google Oneindia Tamil News

டெல்லி: நாங்கள் எப்போதுமே இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் இல்லை ஆர்எஸ்எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இடஒதுக்கீடு முறை குறித்து கல்லூரியில் நடந்த விழா ஒன்றில் பேசினார். அதில், இடஒதுக்கீடு குறித்து நாம் எல்லோரும் ஆலோசிக்க வேண்டும். இது தொடர்பாக விவாதிக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள இடஒதுக்கீடு முறை குறித்து முக்கியமான ஆலோசனைகளை, ஆய்வுகளை நாம் நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

கருத்து தெரிவித்தனர்

கருத்து தெரிவித்தனர்

இது பெரிய அளவில் சர்ச்சையானது. ஆர்எஸ்எஸ் அமைப்பு இடஒதுக்கீட்டு முறையை எதிர்க்கிறதா என்று பலர் கேள்வி எழுப்பி இருந்தனர். பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, பாஜக அமைச்சர் ராமதாஸ் அத்வாலே உள்ளிட்ட தலைவர்கள் இதற்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தனர். பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்த இருந்தனர் .

ஆர்எஸ்எஸ் மீட்

ஆர்எஸ்எஸ் மீட்

இந்த நிலையில் இதுகுறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பு தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில் நாங்கள் எப்போதும் இடஒதுக்கீட்டிற்கு எதிராக இருந்தது கிடையாது. தலித் மக்களுக்கு எதிரானவர்கள் போல எங்களை சித்தரிக்க பார்க்கிறார்கள். ஆனால் நாங்கள் அப்படி இல்லை.

தலித் மக்கள்

தலித் மக்கள்

நாங்கள் தலித் மக்கள் பயனடையும் இடஒதுக்கீட்டிற்கு எதிராக இருந்தது கிடையாது. இனியும் இருக்க மாட்டோம். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு தவறாக வெளியிடப்பட்டு உள்ளது. அவரின் பேச்சை தேவையில்லாமல் அரசியலாக்கி உள்ளனர்.

நாங்கள் எப்படி

நாங்கள் எப்படி

நாங்கள் தலித் மக்களுக்கும் பொருளாதார ரீதியாக பின்னடைந்து இருக்கும் ஏழை மக்களுக்கும் எதிராக செயல்பட்டது இல்லை. அவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை நாங்கள் கண்டிப்பாக ஆதரிக்கிறோம் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

English summary
We are supporting Dalits and reservation for them says RSS after controversy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X