டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அயோத்தியில் சேர்ந்து வழிபடலாம்.. இஸ்லாமிய அமைப்பு திடீர் யோசனை.. உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு!

அயோத்தியில் இந்து - இஸ்லாமியர்கள் எல்லோரும் சேர்ந்து வழிபாடு நடத்தலாம், என்று இஸ்லாமிய அமைப்பு சார்பாக அயோத்தி வழக்கில் வாதம் வைக்கப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : We can go for co-existence says Muslim body in Ayodhya case

    டெல்லி: அயோத்தியில் இந்து - இஸ்லாமியர்கள் எல்லோரும் சேர்ந்து வழிபாடு நடத்தலாம், சர்ச்சைக்குரிய நிலத்தில் இரண்டு தரப்பும் வழிபாடு நடத்தலாம் என்று இஸ்லாமிய அமைப்பு சார்பாக அயோத்தி வழக்கில் வாதம் வைக்கப்பட்டு இருக்கிறது.

    அயோத்தி வழக்கு விசாரணை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்திற்கு உரிமைகோரி சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் உச்ச நீதிமன்றம் சென்றதால் வழக்கு நடந்து வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.

    ஆஜர்

    ஆஜர்

    இந்த வழக்கில் சன்னி வக்பு வாரியம் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளின் சார்பாக மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் ஆஜராகி வாதிட்டு வருகிறார். நேற்று அவர் தனது வாதத்தில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் மசூதி இருந்த பகுதிக்கு வெளியே இந்து வழிபாடு நடந்துள்ளது. 1949 வரை இந்து வழிபாடு நடந்துள்ளது. அதன்பின் 1949ல் எல்லாம் மாறியது.

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    1949ம் வருடம் டிசம்பர் 22ம் தேதி மசூதியின் மையத்திற்குள் இந்து சிலை ரகசியமாக வைக்கப்பட்டு இருக்கிறது. இப்போதும் கூட மசூதிக்கு வெளியே இந்து வழிபாட்டு முறையில் எங்களுக்கு பிரச்சனை இல்லை. மசூதி இருக்கும் பகுதிக்கு வெளியே இந்துக்கள் வழிபாடு நடத்தட்டும். மசூதியின் சுற்றுப்புறத்தில் இந்துக்கள் கோவில் அமைக்கட்டும்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    அயோத்தியில் இந்து - இஸ்லாமியர்கள் எல்லோரும் சேர்ந்து வழிபாடு நடத்தலாம், சர்ச்சைக்குரிய நிலத்தில் இரண்டு தரப்பும் வழிபாடு நடத்தலாம். அதில் எங்களுக்கு பிரச்சனை கிடையாது. ஆனால் அந்த நிலம் எங்களுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு வழங்க வேண்டும்.

    எங்கள் உரிமை

    எங்கள் உரிமை

    அதாவது அந்த 2.77 ஏக்கர் நிலம் எங்களுக்கு சொந்தமானது. அதில் நாங்கள், இந்துக்களுக்கு வழிபாடு நடத்த அனுமதி வழங்கி இருக்கிறோம், என்று தீர்ப்பில் கூற வேண்டும், என்று குறிப்பிட்டார். இதையடுத்து நீதிபதிகள் இதில் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்கள்.

    கேள்வி

    கேள்வி

    அதன்படி 1949க்கு முன் அங்கு வழிபாடு நடந்துள்ளது என்று இஸ்லாமிய அமைப்பே கூறுகிறது. அப்படி என்றால் 1949க்கு முன் அங்கு சிலைகள் இருந்திருக்க வேண்டும். சிலைகள் இல்லாமல் வழிபாடு நடந்து இருக்காது. அப்படி என்றால் மசூதி இருந்து பகுதிக்கு வெளியே அதை ஒட்டி சிலைகள் இருந்துள்ளது என்று தானே அர்த்தம் என்று கேட்டனர்.

    உள்ளே

    உள்ளே

    இதற்கு பதில் அளித்த மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், அங்கு ராமர் சிலைகள் இருந்தது. அங்கு வழிபாடு நடந்துள்ளது. இதை யாரும் மறுக்கவில்லை. யாரும் மறுக்க முடியாது. ஆனால் மசூதிக்கு உள்ளே நடக்கவில்லை. அந்த நிலம் எங்களுக்கு சொந்தம் என்றுதான் இதுவரை நடந்த வழக்குகள் தீர்ப்புகள் வந்துள்ளது. அந்த நிலத்திற்கு இந்து அமைப்புகள் சொந்தம் கிடையாது.

    விதிகள் என்ன ?

    விதிகள் என்ன ?

    அங்கு வேண்டுமானால் அவர்கள் வழிபாடு மட்டும் நடத்தலாம் என்று கூறினார். இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்து வழிபாட்டு முறை ஒரு மசூதியின் கட்டிடத்திற்குள் நடக்க முடியுமா. இஸ்லாமியா விதிகள் இதற்கு என்ன சொல்கிறது. அப்படி சிலை வழிபாடு அனுமதிக்கப்பட்டால் அது மசூதிதானா? என்று கேள்வி எழுப்பினார்.

    என்ன முக்கியம்

    என்ன முக்கியம்

    இதற்கு பதில் அளித்த மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், குரான் சட்டம் முக்கியம்தான். அதன் விதிகள் முக்கியம்தான். ஆனால் நவீன காலத்தில் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியம். அந்த சட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது என்று ஆராய வேண்டும் என்று கூறினார்.

    என்ன மாற்றமும்

    என்ன மாற்றமும்

    இதன் மூலம் அயோத்தி வழக்கில் அடுத்து என்ன மாதிரியான மாற்றம் வேண்டுமானாலும் நடக்கும் என்று கூறுகிறார்கள். அயோத்தி நிலப்பகுதியில் இந்து - இஸ்லாமிய அமைப்புகள் சேர்ந்து வழிபாடு நடத்த போகிறதா, அதற்கு ஏற்றபடி தீர்ப்புகள் வழங்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    English summary
    We can go for co-existence says Muslim body in Ayodhya case yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X