டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேடப்படும் நபர் நித்தியானந்தா- வெளிநாட்டு தூதரகங்களுக்கும் தகவல்: மத்திய அரசு

Google Oneindia Tamil News

Recommended Video

    நித்தியானந்தா செய்யும் சேட்டைகள்... சிறைக்குள் அடைவது எப்போது?

    டெல்லி: நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது புதிய பாஸ்போர்ட் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறுவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    பெங்களூருவில் இளம் பெண்ணை 2010ம் ஆண்டு பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வருகிறார் சாமியார் நித்தியானந்தா. இதற்கிடையே அவர் மீது இரண்டு இளம் பெண்களை கடத்தியதாகவும் குஜராத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குழந்தைக்கடத்தல், தவறாக வழி நடத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் நித்தியானந்தாவை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    We cancelled Nithyananda passport and rejected his application for new one: Ministry of External Affairs

    இந்நிலையில் ஈகுவடார் நாட்டின் தீவு ஒன்றினை வாங்கியுள்ளதாகவும் அதற்கு கைலாசா என பெயரிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தங்கள் நாட்டின் தீவு எதையும் வாங்கவில்லை என்றும், அவர் ஹைதி நாட்டுக்கு தப்பி சென்றுவிட்டதாகவும் ஈகுவடார் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார். மேலும், அவரின் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்படும் நபர் என்பதால் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதாகவும் ரவீஷ் குமார் விளக்கம் அளித்தார்.

    இந்நிலையில் நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருப்பதாக ஒப்புக்கொண்ட அவர்,. நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பி சென்று இருந்தால், தூதரகங்கள் மூலம் அவரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    English summary
    Raveesh Kumar, MEA on fugitive self-styled godman Nithyananda: We have cancelled his passport&rejected his application for new one. We've sensitized all our missions &posts that this man is wanted in several cases of crime. We have asked our missions to sensitize the local govt
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X