டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உதயநிதியை ஒரு பொருட்டாகவே நாங்கள் நினைக்கவில்லை... போட்டுத்தாக்கும் எல். முருகன்

உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரத்தை நாங்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை என்று பாஜக மாநில தலைவர் எல். முருகன் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜகவினர் தமிழகத்தில் மேற்கொண்டுள்ள வேல் யாத்திரைக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அவரது பிரச்சாரத்தை எல்லாம் நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்றும் கூறியுள்ளார் எல். முருகன்

பாஜகவின் வேல்யாத்திரையோ, உதயநிதியின் தேர்தல் பிரச்சாரமோ இரண்டையுமே நிவர் புயல் வந்து தடுத்து நிறுத்தி விட்டது. இரு கட்சியினருமே இப்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளனர்.

கிடைத்த ஓய்வு நேரத்தையும் வீணாக்காத எல். முருகன் டெல்லி சென்றிருக்கிறார். பாஜக தலைமையகத்தில் கட்சியின் மேலிட பொறுப்பாளர் சி டி ரவி, பிஎல் சந்தோஷ் ஆகியோரை சந்தித்து பேசினார்.

அந்த வெற்றி தான் காரணம்.. இப்போது ஹைதராபாத்.. மொத்தமாக குவிந்த பாஜக தேசிய தலைவர்கள். கேசிஆர் ஷாக்! அந்த வெற்றி தான் காரணம்.. இப்போது ஹைதராபாத்.. மொத்தமாக குவிந்த பாஜக தேசிய தலைவர்கள். கேசிஆர் ஷாக்!

திருச்செந்தூரில் நிறைவு

திருச்செந்தூரில் நிறைவு

செய்தியாளர்களிடம் பேசிய முருகன், பல்வேறு தடைகளுக்கு மத்தியில் வேல் யாத்திரையை நடத்தி வருகிறோம். மக்கள் மத்தியில் வேல் யாத்திரைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. நிவர் புயல் காரணமாக வேல் யாத்திரையை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக கூறிய அவர், வரும் டிசம்பர் 3 அல்லது 4ஆம் தேதி திருச்செந்தூரில் வேல் யாத்திரையை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சேதம் தவிர்ப்பு

சேதம் தவிர்ப்பு

நிவர் புயலால் மிகப்பெரிய அளவில் சேதம் நேரலாம் என்று அஞ்சிய நேரத்தில் மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் மிகப்பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

தொகுதி பங்கீடு

தொகுதி பங்கீடு

தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணி தொடரும் என்று இரண்டு கட்சியின் மேலிட தலைவர்களும் அறிவித்துள்ளனர். தொகுதி பங்கு பேச்சு வார்த்தை குறித்து கட்சியின் மேலிடமே முடிவு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

உதயநிதி பிரச்சாரம்

உதயநிதி பிரச்சாரம்

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரம் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த முருகன்,
உதயநிதி ஸ்டாலினின் பிரசாரம் எல்லாம் பாஜகவுக்கு ஒரு பொருட்டே கிடையாது என்றார்.

திமுகவிற்கு பொறாமை

திமுகவிற்கு பொறாமை

வேல் யாத்திரையால் பாஜகவுக்கு கிடைக்கும் மக்கள் ஆதரவைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் திமுகவினர் பிரசாரம் தொடங்கியிருக்கிறார்கள் என்றும் முருகன் கூறியுள்ளார்.

English summary
BJP State President L. Murugan said that Udayanithi Stalin's election campaign was carried out without being able to match the response of the BJP to the Vel pilgrimage in Tamil Nadu and that we did not consider his campaign as an end in itself.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X