டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காங்கிரஸ் நிஜ முகத்தை காட்டிவிட்டது.. 5 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக கேட்கவில்லை.. ஓவைசி அதிருப்தி

Google Oneindia Tamil News

Recommended Video

    அயோத்தி வழக்கில் தீர்ப்பு... அரசியல் தலைவர்கள் கருத்து

    டெல்லி: நாங்கள் நிலத்திற்காக யாசகம் கேட்டகவில்லலை. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் ஒரு மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை வாங்க முடியாத அளவுக்கு தாழ்ந்த நிலைமையில் இல்லை என்று அகில இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார். மேலும் காங்கிரசை கடுமையாக சாடினார்.

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராமர் கோவில் கட்டுமானத்திற்கு வழங்கப்படுவதாக, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், அயோத்தியில் மாற்று இடத்தில் சன்னி வக்ஃப் வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என்று கூறினார்.

    We dont need 5 acre land as donation: Asaduddin Owaisi

    2010இல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் மூன்றில் ஒரு பங்கு வழங்கப்பட்ட நிர்மோஹி அகாராவுக்கு, இதில் நிர்வாக உரிமைகூட இல்லை என்று நீதிமன்றம் கூறியது. மசூதிக்கு நிலம் ஒதுக்கீடு செய்வதற்கும், கோயில் அறக்கட்டளை அமைப்பதற்கும் மூன்று மாதங்களுக்குள் ஒரு திட்டத்தை வகுக்க நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

    சன்னி வக்ஃப் வாரியத்திற்கு அயோத்தியில் வேறு பகுதியில் 5 ஏக்கர் நிலத்தை வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதுபற்றி,
    அகில இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி நிருபர்களிடம் கூறியதாவது:

    அயோத்தி நில விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்ற, தீர்ப்பில் எனக்கு திருப்தி இல்லை. உச்ச நீதிமன்றம் உண்மையில் உச்சமானதுதான், அதேநேரம் தீர்ப்பில் தவறிழைக்காமலே இருக்கும் எனவும் கூறிவிட முடியாது. எங்களுக்கு அரசியலமைப்பில் முழு நம்பிக்கை உள்ளது, நாங்கள் எங்கள் உரிமைக்காக போராடிக்கொண்டிருந்தோம், எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் நன்கொடையாக தேவையில்லை. நாங்கள் நிலத்திற்கான உரிமையைத்தான் கேட்டோம். 5 ஏக்கர் நில சலுகையை நிராகரிக்க வேண்டும்.

    1045 பக்க அயோத்தி தீர்ப்பு

    நாங்கள் நிலத்திற்காக யாசகம் கேட்டகவில்லலை. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் ஒரு மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை வாங்க முடியாத அளவுக்கு தாழ்மை நிலைமையில் இல்லை. இது எங்கள் சட்ட உரிமையைப் பற்றிய வழக்கு, நிலம் தேவை என கேட்ட வழக்கு இல்லை.

    காங்கிரஸ் அதன் உண்மையான நிறத்தை காட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வஞ்சகமும், பாசாங்குத்தனமும் இல்லாதிருந்தால், 1949ல் மசூதி இருந்த இடத்தில், சிலைகள் வைக்கப்பட்டிருக்காது. ராஜீவ் காந்தியால் பூட்டுகள் திறக்கப்பட்டு இருந்திருக்கா விட்டால் மசூதி இன்னமும் கூட இருக்கும். அதேபோலத்தான், பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பிரதமராக இருந்த, காங்கிரசின், நரசிம்மராவ் தனது கடமைகளை சரியாக நிறைவேற்றியிருந்தால், மசூதி இருந்திருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கு காங்கிரஸ் எப்போதுமே ஆதரவு அளிக்கும் என்று, காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Asaduddin Owaisi: Not satisfied with the verdict. Supreme Court is indeed supreme but not infallible. We have full faith in the constitution, we were fighting for our right, we don't need 5 acre land as donation. We should reject this 5 acre land offer, don't patronize us.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X