டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புல்வாமா தாக்குதலின் போது தேர்தல் பிரச்சாரம் செய்தது ஏன்? பிரதமர் மோடி பரபரப்பு விளக்கம்!

புல்வாமா தாக்குதல் நடந்த சமயத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தது ஏன் என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    PM Modi interview: பல கேள்விகளுக்கு பிரதமர் மோடி அளித்த பதிலை பாருங்க!- வீடியோ

    டெல்லி: புல்வாமா தாக்குதல் நடந்த சமயத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தது ஏன் என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்து இருக்கிறார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    பிரதமர் மோடி தேர்தலை முன்னிட்டு தற்போது ஏபிபி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்து உள்ளார். காங்கிரஸ், ராகுல் காந்தி, புல்வாமா தாக்குதல், 5 வருட பாஜக ஆட்சி என்று பல்வேறு விஷயங்கள் குறித்து இவர் இதில் பேசி இருக்கிறார்.

    பிரதமர் மோடி கடந்த 5 வருடங்களில் ஒருமுறை கூட செய்தியாளர் சந்திப்பு நடத்தவில்லை. ஆனால் அதற்கு பதிலாக தற்போது பிரதமர் மோடி, தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்து உள்ளார்.

    மோடி பேட்டி

    மோடி பேட்டி

    பிரதமர் மோடி தனது பேட்டியில், தீவிரவாதத்திற்கு துணை போவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். புல்வாமா தாக்குதலை மிகவும் கவனமாக எதிர்கொண்டோம். தாக்குதல் அடுத்து தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்தி இருந்தால் பெரிய பிரச்சனையாகி இருக்கும். பிரச்சாரத்தை நிறுத்துவது மக்கள் இடையே பெரிய பதட்டத்தை ஏற்படுத்தும். அதனால்தான் புல்வாமா தாக்குதலின் போது திட்டமிடப்பட்ட தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை.

    உங்கள் தொகுதியில் என்ன விசேஷம்.. தவறாமல் படியுங்கள்

    இந்தியா பாதுகாப்பு

    இந்தியா பாதுகாப்பு

    பிரியங்கா காந்தி குறித்த கேள்விக்கு, தேர்தலில் யார் நினைத்தாலும் நிற்கலாம்: அது அவர்களின் விருப்பம். பிரியங்கா காந்தியின் அரசியல் வருகையால் எங்களுக்கு அச்சம் இல்லை. இதெல்லாம் எனக்கு பெரிய பிரச்சனை கிடையாது. இந்தியாவின் பாதுகாப்பை கெடுக்கும் வகையில் காங். தேர்தல் அறிக்கை உள்ளது.

    அத்வானியின் ஆவேச கருத்து.. ஓடி வந்து உடனே பதில் சொன்ன நரேந்திர மோடி!அத்வானியின் ஆவேச கருத்து.. ஓடி வந்து உடனே பதில் சொன்ன நரேந்திர மோடி!

    காங்கிரஸ் எப்படி

    காங்கிரஸ் எப்படி

    காங்கிரஸ் கட்சியிடம் நல்ல தலைவர் கூட இல்லை. 125 வருட பழமையான கட்சி தலைவர் இல்லாமல் தவிக்கிறது. எங்கள் மீது நிறைய குற்றச்சாட்டுகளை காந்தி குடும்பம் வைக்கிறது. காந்தி குடும்பத்தால் ஒரு குற்றச்சாட்டையாவது நிரூபிக்க முடியுமா?.

    கூட்டணி

    கூட்டணி

    கட்சிகள் ஒன்றாக இணைவதால் மக்கள் ஆதரவும் அதிகமாக கிடைக்கும் என்று அர்த்தம் இல்லை. சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியால் எதுவும் மாற்றம் ஏற்படாது. நான் மக்களுடன் இருக்கிறேன். அவர்கள் எனக்கு ஆதரவு அளிக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் சேர்வதால் எந்த மாற்றமும் ஏற்படாது, என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    English summary
    We have handled Pulwama attack with a right sense of mind says PM Modi in the interview.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X