டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேசியத்தை வலுப்படுத்துவோம்.. சமஸ்கிருதத்தை வளர்ப்போம்.. அறிக்கையை வெளியிட்டு மோடி பேச்சு!

தேசியவாத கொள்கைகளை நாம் வலுப்படுத்த வேண்டும், சமஸ்கிருதத்தை நாடு முழுக்க வளர்க்க வேண்டும் என்று பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரதமர் மோடி பேசி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    BJP Manifesto 2019: இந்த 4 அம்சங்கள்தான் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் முக்கியமானது- வீடியோ

    டெல்லி: தேசியவாத கொள்கைகளை நாம் வலுப்படுத்த வேண்டும், சமஸ்கிருதத்தை நாடு முழுக்க வளர்க்க வேண்டும் என்று பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரதமர் மோடி பேசி இருக்கிறார்.

    இன்று காலை லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக கட்சி டெல்லியில் வெளியிட்டுள்ளது. நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது. சங்கல்ப் பத்ரா என்று இந்த தேர்தல் அறிக்கைக்கு பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.

    பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின் பிரதமர் மோடி பேசினார். பாஜகவின் குறிக்கோள் குறித்தும் வாக்குறுதி குறித்தும் அவர் பேசினார்.

    மோடி பேச்சு

    மோடி பேச்சு

    மோடி தனது பேச்சில், எங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு மிக்க நன்றி. எங்கள் தேர்தல் அறிக்கையில் 75 முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருக்கிறது சரியான நேர இடைவெளியில் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் ''ஒரே கோரிக்கை-ஒரே வழி'' என்பதுதான் எங்கள் வாக்குறுதியின் நோக்கம்.

    விவசாய கடன் தள்ளுபடி, நீட் விலக்கு குறித்து கப்சிப்.. அதிமுக, பாமகவின் கோரிக்கைகளை தூக்கி போட்ட பாஜகவிவசாய கடன் தள்ளுபடி, நீட் விலக்கு குறித்து கப்சிப்.. அதிமுக, பாமகவின் கோரிக்கைகளை தூக்கி போட்ட பாஜக

    தேர்தல் அறிக்கை

    தேர்தல் அறிக்கை

    இந்த தேர்தல் அறிக்கையை நாங்கள் 3 மாதம் கஷ்டப்பட்டு கொண்டு வந்தோம். எல்லோரும்தான் தேர்தல் அறிக்கையை கொண்டு வருகிறார்கள். ஆனால் இது அப்படி ஒரு அறிக்கை கிடையாது. இது எங்களை ஆட்சியில் தொடர வைக்கும் அறிக்கை.

    சமஸ்கிருத முன்னேற்றம்

    சமஸ்கிருத முன்னேற்றம்

    பள்ளிகளில் சமஸ்கிருதத்தை ஊக்குவிப்போம். சமஸ்கிருதத்தை வளர்ப்பதற்கான திட்டங்கள் கொண்டு வரப்படும். சபரிமலை பாரம்பரியம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்போம். சபரிமலை பாரம்பரியத்தை காப்போம்.

    தண்ணீர் பிரச்சனை

    தண்ணீர் பிரச்சனை

    அனைத்து மாநிலங்களிலும் தண்ணீர் பிரச்சனை சரி செய்யப்படும். இப்போது தண்ணீர்தான் பிரச்சனை. நல் சே ஜல் திட்டத்தின் கீழ் 2024க்குள் அனைவருக்கும் சுகாதாரமான தண்ணீர் வழங்கப்படும். நதிகள் இணைப்பிற்கு தனி ஆணையம் அமைக்கப்படும்.

    ஊழல் எப்படி

    ஊழல் எப்படி

    ஊழலுக்கு எதிராக நாம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாட்டில் ஊழல் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதேபோல் தொழில்நுட்பத்தில் நாம் அசாத்திய வளர்ச்சியை அடைந்து இருக்கிறோம்.

    தேசியவாதம்

    தேசியவாதம்

    தேசியவாதம்தான் நமது குறிக்கோள். தேசியத்தை வளர்க்க வேண்டும். கீழ் உள்ள மக்களை நாம் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதுதான் நமது மந்திரம். நாம் பல படிகளில் உழைத்தால்தான் சரியான முன்னேற்றத்தை அடைய முடியும். அதற்கு இந்த தேர்தல் வாக்குறுதி உதவும் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    We have to improve Sanskrit and Nationalism says PM Modi in BJP manifesto function.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X