டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேசிய கல்விக் கொள்கை.. பொன்னார் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம்.. அமைச்சர் பொக்ரியால் தமிழில் டிவிட்!

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை (NEP)-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தமிழில் டிவிட் செய்துள்ளார்.

Recommended Video

    RSS திட்டங்கள் ! பிரதிபலித்த புதிய கல்வி கொள்கை..

    நாடு முழுக்க தற்போது தேசிய அளவில் புதிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.இதற்கான அனுமதியை மத்திய அமைச்சரவை அளித்துள்ளது. இதன்மூலம் குறைத்தது 5ம் வகுப்பு வரை தாய் மொழிக்கல்வியை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்பின்புதான் ஆங்கிலத்திற்கு அனுமதி அளிக்கப்படும். 5ம் வகுப்பிற்கு பின் மும்மொழிக் கொள்கையை கொண்டு வர மத்திய அரசு இந்த புதிய கல்விக்கொள்கையில் அனுமதி அளித்துள்ளது.

    We need Pon Radhakrishanan guidance in Tamilnadu says Ramesh Pokhriyal on NEP

    இந்த நிலையில் தேசிய கல்விக்கொள்கை குறித்து பிரதமர் மோடி நேற்று பேசி இருந்தார். இந்த கல்விமுறை புதிய புரட்சியை ஏற்படுத்த போகிறது. மனப்பாட முறையிலிருந்து செயல்வழிக் கல்வியை நோக்கி செல்ல வேண்டும்.

    இது பெரிய மாற்றத்தை கொண்டு வர போகிறது. புதிய கல்விக் கொள்கையானது ஒட்டுமொத்த இந்தியாவுக்கான திட்டம். கல்வி துறையில் மாணவர்கள் இனி ஜொலிக்க முடியும். இதுநாள் வரை கல்வி துறையில் இருந்த பிரச்சினைகள் இந்த புதிய கொள்கை மூலம் களையப்படும்.

    We need Pon Radhakrishanan guidance in Tamilnadu says Ramesh Pokhriyal on NEP

    மாணவர்கள் எளிதாக கற்க முடியும். தாய்மொழி கல்வியை இது ஆதரிக்கிறது. பல துறைகளில் மாணவர்கள் அறிவை வளர்த்துக் கொள்ள முக்கியத்துவம் அளிக்கப்படும், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த நிலையில், பிரதமர் மோடியின் பேச்சை பகிர்ந்த தமிழக மூத்த பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், தேசம் வெல்ல தேசியக் கல்விக் கொள்கை..#NEP2020 பிரதமர் மோடி அவர்களின் உரை தமிழில்,என்று அதற்கான வீடியோ லிங்கை பகிர்ந்து இருந்தார்.

    புதிய கல்விக்கொள்கை... கருணாநிதி பயந்தது போலவே நடந்துள்ளது... மு.க.ஸ்டாலின் பேச்சு புதிய கல்விக்கொள்கை... கருணாநிதி பயந்தது போலவே நடந்துள்ளது... மு.க.ஸ்டாலின் பேச்சு

    இந்த நிலையில் பொன் ராதாகிருஷ்ணன் டிவிட்டை ஷேர் செய்த மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தமிழில் டிவிட் செய்துள்ளார். அதில், பொன் ராதாகிருஷ்ணன் ஜி, தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை (NEP)-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்., என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    We need Pon Radhakrishanan guidance in Tamilnadu says Ramesh Pokhriyal on NEP in his Tamil tweet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X