டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

UNSCல் சீர்திருத்தம் வேண்டும்.. சீன அதிபரை வைத்துக்கொண்டே.. பிரிக்ஸ் மாநாட்டில் விளாசிய பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் பேசி உள்ளார். சீன அதிபர் இடம்பெற்று இருந்த இந்த மீட்டிங்கில், பிரதமர் மோடி அதிரடியாக சில விஷயங்களை குறிப்பிட்டார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட வலுவான கூட்டமைப்புதான் பிரிக்ஸ். இந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு சார்பாக இன்று இணையவழி மாநாடு நடத்தப்பட்டது.

இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜி ஜிங்பிங் உள்ளிட்ட தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி இந்த மாநாட்டில் தற்சார்பு பொருளாதாரம் குறித்தும், ஐநா பாதுகாப்பு கவுன்சில் குறித்தும் பேசினார்.

தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள்.. பிரிக்ஸ் மாநாட்டில் பாக்.கிற்கு மோடி அனுப்பிய மெசேஜ்.. பொளேர்! தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள்.. பிரிக்ஸ் மாநாட்டில் பாக்.கிற்கு மோடி அனுப்பிய மெசேஜ்.. பொளேர்!

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

பிரதமர் மோடி தனது உரையில், கொரோனாவிற்கு பின் பிரிக்ஸ் நாடுகள் உலக அளவில் முன்னிலை வகிக்கும்.பொருளாதார ரீதியாக பிரிக்ஸ் நாடுகள் முன்னிலை வகிக்கும். இந்தியாவில் ஆத்மனிர்பார் திட்டம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. எங்களின் தற்சார்பு கொள்கை பிரிக்ஸ் அமைப்பில் இருக்கும் நாடுகளுக்கு உந்துகோலாக இருக்கும்.

 இலக்கு

இலக்கு

இந்தியாதான் உலகம் முழுக்க அதிக மருந்துகளை ஏற்றுமதி செய்கிறது. உலக நாடுகளின் மருந்து தேவையை பூர்த்தி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக அளவு வேக்சின் உற்பத்தியே எங்கள் இலக்கு. இனி அதில் நாங்கள் கவனம் செலுத்துவோம்.

குரல்

குரல்

இந்தியா எப்போதும் பல தரப்பு குரல்களுக்கு செவி மடுக்கும். இந்தியாவை பொறுத்தவரை மொத்த உலகமும் ஒரு நாடுதான். இந்தியா எப்போது ஐக்கிய நாடுகள் போன்ற அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கும்.ஐநா சபையை இந்தியா எப்போதும் மதிக்கிறது, நம்புகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.

கோரிக்கை என்ன

கோரிக்கை என்ன

பிரிக்ஸ் கூட்டமைப்பு மூலம் ஐநா பாதுகாப்பு கவுன்ஸிலில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். ஐநாவின் அனைத்து அமைப்புகளிலும் மாற்றம் வேண்டும். கொரோனாவிற்கு பின் முக்கியமான மாற்றங்கள் அவசியம் ஆகிறது, என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மோடி கோரிக்கை

மோடி கோரிக்கை

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சேர்வதை சீனா தனது வீட்டோ அதிகாரம் மூலம் எதிர்த்து வரும் நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அதோடு நாங்கள்தான் அதிக மருந்துகளை ஏற்றுமதி செய்கிறோம், வேக்சின் உற்பத்தியையும் அதிகமாக செய்வோம், தற்சார்பு பொருளாதாரத்தில் முன்னேறி உள்ளோம் என்று சீன அதிபரை வைத்துக் கொண்டு பிரதமர் மோடி அதிரடியாக பேசி உள்ளார்.

English summary
We need reform in UNSC says PM Modi in the BRICS summit today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X