டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்ன இது ரவுடித்தனம்.. டெல்லி வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் கண்டனம்.. ஷாக்கிங் லெட்டர்!

டெல்லியில் போலீஸ் போராட்டம் தீவிரம் அடைந்துவரும் நிலையில் தற்போது டெல்லி வழக்கறிகர்களுக்கு எதிராக பார் கவுன்சில் ஆப் இந்தியா கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் போலீஸ் போராட்டம் தீவிரம் அடைந்துவரும் நிலையில் தற்போது டெல்லி வழக்கறிகர்களுக்கு எதிராக பார் கவுன்சில் ஆப் இந்தியா கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது.

டெல்லியில் வழக்கறிஞர்களால் போலீசார் தாக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் நடந்தது. டெல்லி திஸ் ஹசாரி கோர்ட்டில் பார்க்கிங் பிரச்சனையில் போலீசாரை அங்கிருந்த வழக்கறிஞர்கள் தாக்கினார்கள்.

இதில் போலீசார் பலர் மோசமாக காயம் அடைந்தனர். இந்த பிரச்சனையில் 20 போலீஸ் வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டது. போலீஸ் கார் கொளுத்தப்பட்டது.

என்ன விசாரணை

என்ன விசாரணை

இது தொடர்பாக வழக்கில் டெல்லி ஹைகோர்ட் நீதி விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் 2 போலீசார் இதனால் பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் இந்த வழக்கில் வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்ய கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு எதிராக டெல்லியில் போலீசார் போராட்டம் செய்து வருகிறார்கள். பல மாநில ஐபிஎஸ் அதிகாரிகள் போலீசார் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கண்டனம்

கண்டனம்

இந்த நிலையில் டெல்லி வழக்கறிஞர்களின் செயலுக்கு தற்போது பார் கவுன்சில் ஆப் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பார் கவுன்சில் ஆப் இந்தியா சேர்மேன் மனன் குமார் மிஸ்ரா இது தொடர்பாக டெல்லி பார் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், டெல்லியில் வழக்கறிஞர்கள் ரவுடிகளை போல செயல்பட்டு இருக்கிறார்கள்.

மிக மோசம்

மிக மோசம்

இது மிக மோசமான செயல். குண்டர்களை போல வழக்கறிஞர்கள் வன்முறை செய்துள்ளனர். இதை ஏற்க முடியாது. இந்த நிலை தொடர்ந்தால் பார் கவுன்சில் ஆப் இந்தியா, டெல்லி வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக நிற்காது. நமது துறைக்கு நீங்கள் கெட்ட பெயர் வாங்கி கொடுத்துவிட்டீர்கள்.

வேண்டும்

வேண்டும்

கலவரம் செய்த அந்த வழக்கறிகறிஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை உடனடியாக டெல்லி பார் கவுன்சில் கண்டுபிடிக்க வேண்டும். நாம் இப்படி செயல்பட்டால் மக்கள் நம்மை மிக மோசமாக நினைப்பார்கள். நமக்கான ஆதரவு போய்விடும்.

யார் சிபிஐ

யார் சிபிஐ

சிபிஐ , விஜிலன்ஸ் ஆகியோர் இதை பற்றி விசாரிக்க வாய்ப்புள்ளது. உளவுத்துறை ஏற்கனவே இதில் விசாரணையை துவங்கிவிட்டது. நமக்கான ஆதரவு குறைந்து கொண்டே வருகிறது. டெல்லி பார் கவுன்சில் இதில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பார் கவுன்சில் ஆப் இந்தியா சேர்மேன் கேட்டுக்கொண்டுள்ளார்.

English summary
"We're Losing Sympathy...": Bar Council Chairman writes to Delhi Lawyers after Police protest in NCR.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X