டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போலிகள் இனி இருக்காது.. தரமான செய்திகளை எதிர்பார்க்கலாம்.. பேஸ்புக், வாட்ஸ் அப் உறுதி

Google Oneindia Tamil News

டெல்லி: மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் போலியான செய்திகள் பரப்பபடுவது, அதிகரித்துள்ளது.

மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி, சமூக அமைதியையும் சீர்குலைப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களான வாட்ஸ் அப், பேஸ்புக் முக்கிய முடிவை எடுத்துள்ளது.

அந்தவகையில், பேஸ்புக் செயலியில் தரமான மற்றும் நம்பகமான செய்திகளை பயனர்களுக்கு வழங்கும் விதமாக புதிய வசதியை ஒன்றை உருவாக்க உள்ளதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் தெரிவித்திருக்கிறார்.

 வீட்ல விசேஷங்கன்னு சும்மானாச்சுக்கும் சொல்லி.. வாக்காளர்களுக்கு விருந்து வச்சா.. கலெக்டர் வார்னிங் வீட்ல விசேஷங்கன்னு சும்மானாச்சுக்கும் சொல்லி.. வாக்காளர்களுக்கு விருந்து வச்சா.. கலெக்டர் வார்னிங்

நம்பகமான ஊடகம்

நம்பகமான ஊடகம்

எதிர்கால தொழில்நுட்பம் மற்றும் சமூகம் குறித்து நடைபெற்ற வீடியோ உரையாடலில் இதனை அவர் தெரிவித்தார். பேஸ்புக் நிறுவனம் சார்பாக இதற்கென தனி ஊடகவியலாளர்களை நியமிக்க போவதில்லை என தெரிவித்த அவர், தொழில் முறையில் இயங்கி வரும் நம்பகமான ஊடகங்களிடம் செய்திகளைப் பெற்று, பிரத்தியேகமான முறையில் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

போலி செய்திகள்

போலி செய்திகள்

இதுபோன்ற தரமிக்க செய்தி சேவை வசதியானது நிறுவப்பட வேண்டுமென 10 முதல் 15 சதவிகிதம் பேஸ்புக் பயனர்கள் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். போலி செய்திகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக உலா வரும் நிலையில் பேஸ்புக்கில் இந்த முடிவுக்கு வந்துள்ளதற்கு, சமூக வலைதளங்களில் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பிரத்யேக எண் அறிமுகம்

பிரத்யேக எண் அறிமுகம்

இதே போல், செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறிந்து கொள்ளும் விதமாக புதிய சேவை என்னை வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, +91-9643-000-888 எனும் சேவை தொடர்பு எண் இந்திய பயனர்களுக்காக பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளது.

உண்மைத் தன்மை

உண்மைத் தன்மை

தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, பெங்காலி மற்றும் மலையாள மொழிகளை உள்ளடக்கிய வீடியோக்கள் குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்பட செய்திகளின் உண்மைத் தன்மையை இந்த சேவை மூலம் பெறலாம் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
No Fake News; Hence expect quality messages From Facebook Whatsapp
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X