டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதை நிறுத்துங்க.. இல்லாவிட்டால்... செல்போன்களையே விற்க மாட்டோம்.. சில்லறை வியாபாரிகள் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: ஆன்லைனில் மொபைல் போன்களுக்கு தள்ளுபடி கொடுப்பதை நிறுத்தாவிட்டால் பிராண்ட் மொபைல்போன்களை இனி நாங்கள் விற்க மாட்டோம் சில்லறை வியாபாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சில்லறை வர்த்தகம் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பரில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக சரிந்துள்ளது. இதற்கு காரணம் ஆன்லைன் வர்த்தகமே காரணம் என்று சில்லறை வியாபாரிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.

 we will not sale brand cell phones due to online: retailers warns

அகில இந்திய மொபைல்போன்கள் சில்லறை விற்பனையாளர் சங்கம் பிரபல மொபைல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கடிதம் எழுதி உள்ளது. அந்த கடிதத்தில், "ஆன்லைன் விற்பனையில் அதிக தள்ளுபடி தரப்படுகிறது.

இதனால் மக்கள் ஆன்லைனில் போன்களை வாங்குவதையே விரும்புகிறார்கள். இந்த நிலை நீடித்தால் சில்லறை விற்பனையாளர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படும். ஏற்கனவே பொருளாதார மந்த நிலையால் வர்த்தகம் இல்லாமல் பாதிக்ப்பட்டு வேறு தொழிலுக்கு செல்ல வேண்டிய நெருக்கடியால் பலர் மாறிவிட்டனர். எனவே ஆன்லைன் வர்த்தகத்தால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும்.

அரசு உத்தரவிட்டால் .. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க தயாராக உள்ளோம்.. இந்திய ராணுவ தளபதி பேட்டி அரசு உத்தரவிட்டால் .. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க தயாராக உள்ளோம்.. இந்திய ராணுவ தளபதி பேட்டி

ஆன்லைன் விற்பனையில் அளிக்கப்படும் தள்ளுபடி அளவுக்கு நாங்களும் தள்ளுபடி செய்து விலையை குறைத்து விற்பனை செய்வோம். இல்லாவிட்டால் செல்போன் விற்பனையையே புறக்கணித்துவிடுவோம் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
retailers warns we will not sale brand cell phones due to online cash back and price fall
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X