டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் தலையிட மாட்டோம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி.. திமுகவிற்கு பின்னடைவு!

உள்ளாட்சி தேர்தல் குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு விளக்கம் அளிக்கும்படி திமுக தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Google Oneindia Tamil News

zடெல்லி: உள்ளாட்சி தேர்தல் குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு விளக்கம் அளிக்கும்படி திமுக தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அதே சமயம் புதிதாக உருவாக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் வேறு தேதிகளில் நடக்கும்.

We wont interfere in TN Local body election anymore says Supreme Court: Setback for DMK

உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மனு அளித்தது. அதன்படி தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும், சரியாக இடஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும். அதுவரை தேர்தலை நடத்தக்கூடாது என்று மனு அளிக்கப்பட்டது.

திமுக சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்று தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது. ஆனால் மீண்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக, காங்கிரஸ் உட்பட 10க்கும் மேற்பட்ட அமைப்புகள், நபர்கள் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. தலைமை நீதிபதி போப்டே, நீதிபதிகள் சூரிய காந்த், பூஷன் ராமகிருஷ்ணன் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இந்த 10 மனுக்களை ஏற்காத நீதிபதிகள், ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்று கூறினார்கள்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புபடி உள்ளாட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவில் சந்தேகம் இருப்பதாக கூறி திமுக மீண்டும் மூன்றாவது முறையாக வழக்கு தொடுத்து இருந்தது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் சில விஷயங்கள் புரியவில்லை. அதை நீதிபதிகள் விளக்க வேண்டும் என்று திமுக சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

திமுகவை தொடர்ந்து போராட்டத்தில் குதித்த மாணவர்கள்.. களமிறங்கிய சென்னை நியூ காலேஜ்.. போலீஸ் குவிப்பு!திமுகவை தொடர்ந்து போராட்டத்தில் குதித்த மாணவர்கள்.. களமிறங்கிய சென்னை நியூ காலேஜ்.. போலீஸ் குவிப்பு!

இந்த மனு மீதான மறுவிசாரணை இன்று வந்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் இதை விசாரணைக்கு எடுக்கவில்லை. தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேலும் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்பான மனுக்களை நாங்கள் விசாரிக்க மாட்டோம்.

கடந்த உத்தரவு குறித்து விளக்கம் அளிக்க தேவையில்லை, தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நாங்கள் தலையிட மாட்டோம் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

English summary
We won't interfere in TN Local body election anymore says Supreme Court: Huge setback for DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X