டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அயோத்தி வழக்கில் மறுசீராய்வு இல்லை.. உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்.. சன்னி வக்ஃப் வாரியம் முடிவு

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய மாட்டோம் என்று சன்னி வக்ஃப் வாரியம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ayodhyaverdic | அயோத்தி வழக்கில் மறுசீராய்வு இல்லை - சன்னி வக்ஃப் வாரியம்

    டெல்லி: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய மாட்டோம் என்று சன்னி வக்ஃப் வாரியம் தெரிவித்துள்ளது.

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக பிரச்சினை நீடித்து வந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ் ஏ பாப்டே, டி ஒய் சந்திரசூட், அசோக் பூஷன், எஸ் ஏ நசீர் ஆகியோர் தீர்ப்பை வழங்கினர்.

    அதில் பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் உள்ள கட்டடங்கள் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது இல்லை. சர்ச்சைக்குரிய இடம் தங்களுக்கு சொந்தமானது என்பதை முஸ்லீம் அமைப்புகள் நிரூபிக்கவில்லை.

    மத்திய அரசு

    மத்திய அரசு

    எனவே நிலத்துக்கு சொந்தம் கொண்டாடிய இஸ்லாமிய அமைப்புகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக் கொள்ள 5 ஏக்கர் நிலம் வழங்கப்படும். வக்ஃபு வாரியம் ஏற்கும் இடத்தில் வழங்க உத்தரப்பிரதேச அரசுக்கும் மத்திய அரசுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மறுசீராய்வு

    மறுசீராய்வு

    இதுகுறித்து சன்னி வக்ஃப் வாரியம் காலையில், 5 ஏக்கர் நிலம் எங்களுக்கு ஏற்புடையது இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பில் முரண்பாடுகள் இருப்பதால் மறுசீராய்வு மனு தாக்கல் செய்வோம் என்று கூறியது. ஆனால் சன்னி வக்ஃப் வாரியம் தனது முடிவை இப்போது மாற்றியுள்ளது. அதன்படி அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய மாட்டோம் என்று சன்னி வக்ஃப் வாரியம் தெரிவித்துள்ளது.

    தீர்ப்பு சரி

    தீர்ப்பு சரி

    இது தொடர்பாக அயோத்யா ஜம்மா மஸ்ஜித் ஷாஹி இமாம் அளித்த பேட்டியில், அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். இஸ்லாமிய மக்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை எதிர்த்து மறுசீராய்வு செய்ய கூடாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு சரியாக இருப்பதாகவே கருதுகிறோம்.

    மறுசீராய்வு மனு இல்லை

    மறுசீராய்வு மனு இல்லை

    இதை நாம் எல்லோரும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம் என்று கூறிய பின்பே இப்படி தீர்ப்பு வந்துள்ளது. இந்த நிலையில் நாம் மீண்டும் அதை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய கூடாது என்று கூறியுள்ளார்.

    English summary
    Sunni Waqf Board says that there is no value for 5 Acre land for us. There are contrary in judgement. we will go appeal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X