டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடிதான் வேட்பாளர் என்றால் பாஜகவுடன் கூட்டணி கிடையாது.. சிவசேனா புது போர்க்கொடி!

லோக் சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று பாஜகவின் நெருங்கிய தோழமை கட்சியான சிவசேனா தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தும் சிவசேனா- வீடியோ

    டெல்லி: லோக் சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று பாஜகவின் நெருங்கிய தோழமை கட்சியான சிவசேனா தெரிவித்துள்ளது.

    லோக் சபா தேர்தலுக்காக எல்லா கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. ஆனால் பாஜகவிற்குள் மட்டும் ஒரு பூசல் உருவாகி இருக்கிறது. கடந்த சில நாட்களாக பாஜக கட்சிக்குள் உருவாகி இருந்த சிறிய பூசல் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்துள்ளது.

    பாஜகவில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பிரதமர் மோடிக்கு பதிலாக 2019 தேர்தலில் முன்னிறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. இதற்கு தற்போது சிவசேனாவும் ஆதரவு தெரிவித்துள்ளது.

    நல்ல உறவு

    நல்ல உறவு

    லோக் சபா தேர்தல் குறித்து சிவசேனா சார்பாக அக்கட்சியின் ராஜ்ய சபா எம்.பி சஞ்சய் ராவத் அளித்துள்ள பேட்டியில், சிவசேனா பாஜகவுடன் இந்த தேர்தலில் கூட்டணி வைக்காது. நாங்கள் பாஜகவுடன் அத்தனை நெருக்கமாக இல்லை. பாஜகவுடன் எங்கள் உறவு 2014 தேர்தல் போல கிடையாது.

    கூட்டணி எப்படி

    கூட்டணி எப்படி

    பாஜக எப்போதும் அவர்களை பற்றி மட்டுமே நினைக்கிறார்கள். நாங்கள் எங்களை பற்றி நினைக்க போகிறோம். இந்த தேர்தலில் நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம். பாஜகவுடன் கூட்டணி என்ற வார்த்தை இனி எங்கள் அகராதியில் கிடையாது. இந்த தேர்தலில் தொங்கு சபைதான் உருவாகும்.

    நிதின் கட்கரி

    நிதின் கட்கரி

    தொங்கு சபை உருவானால், பாஜக நிதின் கட்கரியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நாங்கள் பாஜகவிற்கு ஆதரவு அளிப்போம். மோடியை முன்னிறுத்தினால் நாங்கள் பாஜகவிற்கு ஆதரவு அளிக்க முடியாது என்று சிவசேனா சார்பாக எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே குழப்பம்

    ஏற்கனவே குழப்பம்

    ஏற்கனவே பாஜகவில் பிரதமர் மோடிக்கு பதிலாக மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்து வருகிறது. முக்கியமாக ஆர்எஸ்எஸ் அமைப்பு நிதின் கட்கரியை முன்னிறுத்தவே அதிகம் விரும்புவதாகவும் தகவல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Lok Sabha Election 2019: We won't take a ride with BJP if Modi is PM candidate says, Shiv Sena.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X