டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 26 வரை 8 கட்டங்களாக வாக்குப்பதிவு - மே 2ல் ரிசல்ட்

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 27ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 29ஆம் தேதி வரைக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறி

Google Oneindia Tamil News

டெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதற்கட்ட தேர்தல் தொடங்குகிறது. ஏப்ரல் 29ஆம் தேதி 8ம் கட்ட தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

தமிழகத்தை விட பெரிய மாநிலம் மேற்கு வங்கம். அங்கு 294 தொகுதிகள் உள்ளன. கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக இருந்த மேற்கு வங்க மாநிலத்தில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸின் (டி.எம்.சி) தலைவரான மாநில முதல்வர் மம்தா பானர்ஜி முதன்முதலில் 2011ம் ஆண்டு மே 20ம் தேதியன்று மேற்கு வங்க முதல்வரானார். 2016ம் ஆண்டில் மீண்டும் மாநில மக்களின் ஆதரவை பெற்று இரண்டாவது முறையாக முதல்வரானார்.

West Bengal Election 2021 Polls to Be Held in 8 Phases from March 27th to April 29th 2021

மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க கடும் முயற்சி செய்து வருகிறார் மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்தை கைப்பற்றும் முயற்சியில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இன்றைய தினம் 5 மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் தேதியை அறிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. கேரளா, புதுச்சேரி, தமிழ்நாட்டில் ஒரே கட்டங்களாக வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது.

தமிழகத்தில் 34.6 3% கூடுதல் வாக்குச்சாவடிகள்.. ஒரு வாக்குச்சாவடிக்கு 1000 வாக்காளர் மட்டும் அனுமதிதமிழகத்தில் 34.6 3% கூடுதல் வாக்குச்சாவடிகள்.. ஒரு வாக்குச்சாவடிக்கு 1000 வாக்காளர் மட்டும் அனுமதி

மேற்கு வங்க மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. அங்கு முதல் கட்ட வாக்குப் பதிவு மார்ச் 27 ஆம் தேதி தொடங்குகிறது. 2 ஆம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 1 ஆம் தேதி நடைபெறும். 3ஆம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதியும், 4ஆம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 10 ஆம் தேதியும் நடைபெறும். 5ஆம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 17ஆம் தேதியும், 6ஆம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 22 ஆம் தேதியும் நடைபெறும்.

7ஆம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 26ஆம் தேதியும் 8 வது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 29 ஆம் தேதியும் நடைபெறுகிறது. மேற்கு வங்க மாநிலத்தில்தான் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மேற்குவங்கத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்பாக மத்திய தேர்தல் ஆணையம் அதிருப்தி அடைந்துள்ளது. அதனால், 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் மாநில சட்டசபை தேர்தல் ஆறு கட்டங்களாக நடைபெற்றது. இந்த ஆண்டு 8 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டசபைத் தேர்தல் யாருக்கு சாதகமாக இருக்கும் மம்தா பானர்ஜி மீண்டும் வெற்றி பெற்று அரியணையை கைப்பற்றுவாரா பார்க்கலாம்.

English summary
West Bengal Assembly Election 2021 Dates: The West Bengal Assembly has a total of 294 seats and the term of the Mamata Banerjee-led Trinamool Congress (TMC) government comes to an end on May 30.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X