டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அட.. நீங்க என்ன பீட்சா டெலிவரியா பண்ணுறீங்க? மத்திய அரசை நச்சென்று கலாய்த்த டெரிக் ஓ பிரையன்!

மத்திய பாஜக அரசு பீட்சா டெலிவரி செய்வது போல வேகமாக தினமும் மசோதாக்களை தாக்கல் செய்து வருகிறது என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் கிண்டல் செய்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய பாஜக அரசு பீட்சா டெலிவரி செய்வது போல வேகமாக தினமும் மசோதாக்களை தாக்கல் செய்து வருகிறது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் எம்பி டெரிக் ஓ பிரையன் கிண்டல் செய்துள்ளார்.

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு இரண்டாவது முறை பதவி ஏற்றத்தில் இருந்தே லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் மசோதாக்களை நிறைவேற்றுவதில் வேகம் காட்டி வருகிறது. சில முக்கிய மாநில கட்சிகளுடன் இணக்கம் இருக்கும் போதே வேகமாக மசோதாக்களை தாக்கல் செய்து அதை நிறைவேற்ற மத்திய அரசு முயன்று வருகிறது.

What? 3 bill in 3 days: Are you delivering Pizza asks Derek OBrien in Lok Sabha

தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா, தனி நபர்களை தீவிரவாதிகளாக உபா சட்டத்திருத்த மசோதா, நதி நீர் தீர்ப்பாய மசோதா, தேசிய மருத்துவ ஆணைய மசோதா முத்தலாக் தடை சட்ட மசோதா என்று மிக மிக முக்கியமான சர்ச்சைக்கு உரிய மசோதாக்களும் வரிசையாக தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

சிசிடி சித்தார்த்தா உடல் தகனம்.. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உட்பட பலர் கண்ணீர் அஞ்சலி! சிசிடி சித்தார்த்தா உடல் தகனம்.. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உட்பட பலர் கண்ணீர் அஞ்சலி!

இதில் மிக முக்கியமாக முத்தலாக் தடை சட்ட மசோதா நேற்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது. இந்த நிலையில் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் எம்பி டெரிக் ஓ பிரையன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், மத்திய அரசு ஏன் மசோதாக்களை இவ்வளவு வேகமாக தாக்கல் செய்து வருகிறது. அவர்கள் என்ன பீட்சா டெலிவரியா செய்கிறார்கள். மூன்று நாட்களில் மூன்று முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்துள்ளனர். ஏன் இந்த வேகம்.

மசோதாக்கள் என்பதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அதை குறித்து ஆராய வேண்டும். எல்லோரும் விவாதிக்க வேண்டும். அப்போதுதான் சரியாக நிறைவேற்ற முடியும். ஆனால் பாஜக மிக வேகமாக மசோதாக்களை பீட்ஸா டெலிவரி செய்வது போல தாக்கல் செய்கிறது, என்றுள்ளார்.

அதேபோல் இவர் செய்துள்ள டிவிட்டில் 2004-2009ல் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களில் 60% மசோதாக்கள் ஆராயப்பட்டது. 2009-2014ல் 71% மசோதாக்கள் ஆராயப்பட்டது. ஆனால் 2014-2019ல் 26% மசோதாக்கள் ஆராய பட்டது. இப்போது அதுவும் குறைந்து 5% மசோதாக்கள் மட்டும் ஆராயப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது, வருத்தம் அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

English summary
What? 3 bill in 3 days.. Are you delivering Pizza asks Trinamool MP Derek O'Brien in Lok Sabha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X