டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சர்ச்சைக்குரிய ராஜீவ் காந்தியின் ஐ.என்.எஸ். விராத் போர்க்கப்பல் விவகாரம்.. அன்று என்னதான் நடந்தது?

Google Oneindia Tamil News

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஐ.என்.எஸ். விராத் போர்க்கப்பலை குடும்பத்தினரின் உல்லாசத்துக்காக பயன்படுத்தியதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரம் பூதாகரமாக கிளம்பியுள்ள நிலையில் 1998-ம் ஆண்டு இது தொடர்பாக இந்தியா டுடே ஆங்கில ஏடு புகைப்படங்களுடன் விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது.

மூத்த பத்திரிகையாளர் அனிதா பிரதாப் எழுதியுள்ள அக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:

ராஜீவ்காந்தி குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க சென்ற இடம் லட்சத்தீவுகளின் பங்காரா. இது மிகவும் பாதுகாப்பான தீவுகள் மட்டும் அல்லாது வெளிநாட்டவர் தடை செய்யப்படாத பகுதியும் கூட.

1987-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி ராஜீவ் மகன் ராகுல் காந்தியும் அவரது நண்பர்களும் லட்சத்தீவு நிர்வாகத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் பங்காரா சென்றடைந்தனர். ராஜீவ் குடும்பத்தினருக்கு தொந்தரவு ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தேர்தலுக்கு பிறகு மூன்றாவது அணி உருவாகுமா? நம்ம வாசகர்கள் சொன்ன அதிரடி கருத்து இதுதான்!தேர்தலுக்கு பிறகு மூன்றாவது அணி உருவாகுமா? நம்ம வாசகர்கள் சொன்ன அதிரடி கருத்து இதுதான்!

ராகுல், பிரியங்கா, நண்பர்கள், அமிதாப்

ராகுல், பிரியங்கா, நண்பர்கள், அமிதாப்

ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்காவின் 4 நண்பர்கள், சோனியாவின் சகோதரி, அவரது தாயார் மெய்னோ, சோனியாவின் தாய் மாமா மற்றும் அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், அவர்களது 3 குழந்தைகள், அமிதாப்பின் சகோதரர் அஜிதாப், முன்னாள் மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங்கின் சகோதரர் பிஜேந்திர சிங்கின் மனைவி, மகள் ஆகியோர் ஒன்றாக விடுமுறையை கழித்தனர். டிசம்பர் 30-ந் தேதிதான் ராஜீவ் காந்தியும் சோனியா காந்தியும் வருகை தந்தனர். அதற்கு மறுநாள் அமிதாப்பச்சன் கொச்சியில் இருந்து கரவெட்டிக்கு ஹெலிகாப்டரில் பயணித்தார்.

மிரட்டிய அமிதாப்

மிரட்டிய அமிதாப்

அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சன் 4 நாட்கள் கழித்துதான் வநந்தார். அவர்தான் பிரியங்காவுக்கு பாதுகாப்பாக இருந்தார். கொச்சி விமான நிலையத்தில் அமிதாப்பச்சனை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளர் படம் பிடிக்க கடும் கோபத்தை வெளிப்படுத்தினார்.

டெல்லியில் இருந்து மது

டெல்லியில் இருந்து மது

ஒவ்வொரு நாளும் சூரிய குளியல், நீச்சல், மீன் பிடிப்பது, படகில் பயணிப்பது என உற்சாகமாக இருந்தனர் ராஜீவ் குடும்பத்தினர். வெளிஉலகம் அறிந்திராத தின்னகரா, பரளி தீவுகளுக்கும் அவர்கள் சென்றனர்., கடற்கரை கொண்டாட்டங்கள் ஒவ்வொரு நாளும் கட்டின. டெல்லியில் இருந்து மது வகைகள், ஒயின்கள் வரவழைக்கப்பட்டன. அகட்டியில் கோழி பண்ணை ஒன்றில் இருந்து 100 கோழிகள் வரவழைக்கப்பட்டன. மீன்கள் அங்கேயே பிடித்து சமைக்கப்பட்டன. பப்பாளி, சப்போட்டா, கொய்யா ஆகியவையும் அனுப்பி வைக்கப்பட்டன.

மலைக்க வைக்கும் பர்சேஸ்

மலைக்க வைக்கும் பர்சேஸ்

கொச்சியில் இருந்து காட்பரி சாக்லேட்டுகள், 40 கிரேடு குளிர்பானங்கள், 300 மினரல் வாட்டர் பாட்டில்கள், முந்திரி பருப்புகள், அமுல் சீஸ், 105 கிலோ பாசுமதி அரிசி, பச்சை காய்கறிகளும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதுவும் டிசம்பர் 23-ந் தேதி கப்பலில் இவை அனுப்பி வைக்கப்பட்டன.

நீர்மூழ்கிக் கப்பல், போர்க்கப்பல்

நீர்மூழ்கிக் கப்பல், போர்க்கப்பல்

இந்தியாவின் போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.விராத் ராஜீவ் காந்தி குடும்பத்தினரை அழைத்துச் செல்லவும் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டது. ராஜீவ் குடும்பத்தின் பாதுகாப்புக்கு நீர்மூழ்கிக் கப்பலும் பயன்படுத்தப்பட்டன என்கின்றன பாதுகாப்பு வட்டாரங்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி படங்கள்: India Today, 1988 January 31

English summary
Here the details of Controversial Rajiv Gandhi's 1987 Holiday Tour issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X