டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக மாணவர்கள் டெல்லி மாணவர்களின் உரிமையை பறிக்கிறார்கள்.. கெஜ்ரிவாலின் பரபர போன் கால்!

தமிழக மாணவர்களுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசும் பதிவு செய்யப்பட போன் கால் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழக மாணவர்களுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசும் பதிவு செய்யப்பட போன் கால் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லோக்சபா தேர்தலுக்காக டெல்லியில் தீவிரமான பிரச்சாரம் நடந்து வருகிறது. டெல்லியில் தற்போது பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில் பிரச்சாரத்திற்காக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேசி ரெக்கார்ட் செய்யப்பட ஆடியோ பதிவு ஒன்று போன் காலாக டெல்லி மக்களுக்கு சென்று கொண்டு இருக்கிறது. அதில் அவர் ஆம் ஆத்மி கட்சிக்காக வாக்கு கேட்கிறார்.

தமிழக மாணவர்களுக்கு எதிராக பேசிய கெஜ்ரிவால்.. தேர்தல் ஆணையத்தில் மாணவர்கள் புகார்! தமிழக மாணவர்களுக்கு எதிராக பேசிய கெஜ்ரிவால்.. தேர்தல் ஆணையத்தில் மாணவர்கள் புகார்!

என்ன ஆடியோ

என்ன ஆடியோ

அந்த போன் காலில், டெல்லியில் பிற மாநில மக்களின் ஆதிக்கம் அதிகம் ஆக்கிவிட்டது. டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழர்கள் அதிகம் படிக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு வேலை கிடைக்கிறது. இதனால் டெல்லி வாசிகளின் வாய்ப்புகள் பறிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

விளக்கம் என்ன

விளக்கம் என்ன

இந்த போன் கால் குறித்து ஆம் ஆத்மி கட்சி தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில், டெல்லியில் நடக்க கூடிய விஷயத்தைதான் நாங்கள் பேசி இருக்கிறோம். டெல்லி மாணவர்களுக்கு டெல்லியில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. முக்கியமான டெல்லி பல்கலையில் மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஏன்

ஏன்

பொதுவாக பிற மாநிலங்களில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்கிறார்கள். அதனால் அவர்கள் எளிதாக கட் ஆப் பெற்று டெல்லி பல்கலைக்கழகம் வருகிறார்கள். ஆனால் டெல்லியில் மாநில பாடத்திட்டம் இல்லை. இதனால் இங்கு சிபிஎஸ்இ மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க முடியாமல் திணறுகிறார்கள். இதனால் அவர்கள் டெல்லி பல்கலையில் சேர முடிவதில்லை.

அரசு

அரசு

இங்கிருக்கும் கல்லூரிகள் மத்திய அரசால் இயக்கப்படுகிறது. இதற்கு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். இதை நாங்கள் வாக்குறுதியாக கொடுத்துள்ளோம். டெல்லி கல்லூரிகளில் டெல்லி மாணவர்களுக்கு 85% இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று நாங்கள் வாக்குறுதி அளித்துள்ளோம் என்று அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

English summary
What Actually Arvind Kejriwal said against Tamilnadu Students studying in Delhi University.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X