டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வட கொரியா, ஏமன் உட்பட, கெத்து காட்டும் 20 நாடுகள்.. எல்லைக்குள்ளே போக முடியாத கொரோனா வைரஸ்!

Google Oneindia Tamil News

டெல்லி: உலகம் முழுவதையும், கொரோனா வைரஸ் பெரும்பாடுபடுத்தி வருகிறது. உலக வல்லரசு அமெரிக்காதான், தற்போது உலகத்திலேயே அதிகப்படியான கொரோனா நோய் தொற்று உள்ள நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

    இந்த மோசமான சூழ்நிலையிலும், 20 நாடுகள், தங்கள் எல்லைக்குள் கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்து வருகின்றன. உண்மையிலேயே பாராட்ட வேண்டிய நாடுகள்தான் அவை.

    What are the countries have not declared any known cases of coronavirus?

    கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஒரு தகவல் அட்டவணை 63 நாடுகளில் தங்கள் எல்லைகளில் கொரோனா தொற்றுநோய் பாதிப்பு இல்லை என அறிவித்திருந்தன. ஆனால், நேற்றைய வியாழக்கிழமை நிலவரப்படி 20 நாடுகள் மட்டுமே இந்த பட்டியலில் உள்ளன.

    நாடுகள் - அவற்றின் மக்கள் தொகை பற்றி பார்க்கலாமே:

    • கிரிபட்டி (முதலில் புத்தாண்டு பிறக்கும் நாடு) - 116,300
    • லெசோதோ - 22 லட்சம்
    • தஜிகிஸ்தான் - 89 லட்சம்
    • மலாவி - 1.86 கோடி
    • பலாவ் - 2 கோடி
    • சமோவா - 196,440
    • சாவோ டோம் + பிரின்சிபி - 204,300
    • சியரா லியோன் - 76 லட்சம்
    • சாலமன் தீவுகள் - 611,300
    • தெற்கு சூடான் - 1.2 கோடி
    • போட்ஸ்வானா - 30 லட்சம்
    • புருண்டி - 1 கோடி
    • கார்போ வெர்டே- 525,000
    • கொமொரோஸ்- 814,000
    • டோங்கா - 108,000
    • துர்க்மெனிஸ்தான்- 6 லட்சம்
    • துவாலு - 11,192
    • வனாட்டு - 276,250
    • ஏமன் - 2.8 கோடி
    • வட கொரியா 2.55 கோடி

    இதில் வட கொரியாவில் கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், ரகசியமாக சர்வதேச உதவியை அந்த நாட்டு அதிபர் கிம் ஜான் உன் நாடியுள்ளதாகவும், அதை வெளிப்படுத்த மறுத்து வருவதாகவும் மேல்நாட்டு ஊடகங்கள் குற்றம்சுமத்தி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நாடுகளுக்கும் கொரோனா பரவாமல் அந்த நாட்டு மக்களாவது பதற்றமின்றி நிம்மதியாக வாழட்டும் என்பதுதான் மற்றப் பகுதி மக்களின் வேண்டுதலாக உள்ளது.

    English summary
    What are the countries have not declared any known cases of coronavirus? here is the detail.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X